azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being needs love, every being inhales and exhales Love. Love is the very breath of life; each and every one of you are embodiments of Love. Love knows no fear, and so, love needs no falsehood to support it. It is only fear, that makes people warp the face of truth, to make it pleasant for those whom they fear. Love seeks no reward, love is its own reward. Even a small trace of greed for gain (vishaya vasana) degrades love into a bargain over the counter. Love removes all egoism; the self is transcended, forgotten and superseded when there is love. When such pure Love is directed towards the Lord, it is called Bhakthi (Devotion).(Divine Discourse, Oct 19, 1966.)
Develop love, scatter love, reap love, there is no religion higher than that.That is the noblest service. - Baba
ஒவ்வொரு ஜீவராசிக்கும் அன்பு தேவைப் படுகிறது;ஒவ்வொன்றும் அன்பையை சுவாசித்து,அன்பையே வெளிப்படுத்துகிறது.அன்பே வாழ்வின் உயிர் மூச்சாகும்; நீங்கள் ஒவ்வொருவரும் அன்பின் வடிவங்களே.அன்பு அச்சமறியாதது;எனவே அன்பிற்கு, தன்னைத் தாங்குவதற்கு பொய்மை தேவைப்படுவதில்லை.அச்சம் தான் மனிதர்களை,தாம் அஞ்சுபவர்களுக்கு இனிமையாக ஆக்குவதற்காக,உண்மையின் முகத்தைத் திரிக்க வைக்கிறது. அன்பு எந்தப் பரிசையும் நாடுவது இல்லை; அன்பே அதன் பரிசல்லவா. லாபத்தை நாடும் பேராசையின் ஒரு சிறு சுவடு இருந்தால் கூட ,அன்பு பேரமாகி விடுகிறது. அன்பு அனைத்து அஹங்காரத்தையும் நீக்கி விடுகிறது; அன்பு இருக்குமானால், தன்னலம் கடக்கப்பட்டு,மறக்கப் பட்டு,பின்னுக்குத் தள்ளப் பட்டு விடுகிறது. இப்படிப் பட்ட தூய்மையான பக்தி இறைவன் பால் செலுத்தப் படும் போது , அதுவே பக்தி எனப்படுகிறது.
அன்பை வளர்த்து, அன்பைப் பரப்பி, அன்பை அறுவடை செய்யுங்கள்;அதை விட சிறந்த மதம் எதுவும் இல்லை>அதுவே மேன்மையான சேவையாகும் -பாபா