azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Take failures and victory coolly. To do the latter is a very difficult mental exercise. In a running race, the losers, when running neck to neck, prompt the winners to run faster. They inspire the grit, to put in that extra pace which brings victory to the winners. Hence, winners must actually be thankful to the losers for their victory. Those who did not win, I ask you not to lose your self-confidence. Never attach too much value to victory and defeat. All of you are born for far greater things than winning mundane races and competitions. Your destiny does not depend upon a game or an examination – it depends more upon your character, your will power and the grace of God.(Divine Discourse, Nov 25, 1959.)
Life is a challenge, meet it; Life is a game, play it; Life is love, enjoy it. - Baba
தோல்விகளையையும்,வெற்றிகளையும், அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். இரண்டாவதைச் செய்வது மிகவும் கடினமான மனப் பயிற்சியாகும்.ஓட்டப் பந்தயத்தில்,தோற்பவர்கள்,ஒருவருக்கு ஒருவர் மிக அருகாமையில் இருக்கும் போது, வெல்பவர்களை வேகமாக ஓடும்படி ஊக்குவிக்கிறார்கள். அவர்கள், வெல்பவர்களுக்கு வெற்றியை அளிக்க வல்ல, இன்னும் கொஞ்சம் அதிக வேகத்துடன் ஓடுவதற்கான மன உறுதியைத் தூண்டுகிறார்கள். எனவே, வெல்பவர்கள், தோல்வி உற்றவர்களுக்குத் தான் உண்மையில் நன்றி கூற வேண்டும். வெற்றி பெறாதவர்களுக்கு, உங்கள் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன். ஒரு போதும் வெற்றிக்கோ, தோல்விக்கோ அதிக மதிப்பு அளிக்க வேண்டாம். நீங்கள் அனைவருமே சாதாரண பந்தயங்கள் மற்றும் போட்டிகளை வெல்வதை விட ,மிக உயர்ந்த பலவற்றைச் சாதிப்பதற்காகப் பிறந்துள்ளீர்கள். உங்களது தலைவிதி ஒரு விளையாட்டையோ அல்லது ஒரு பரீட்சையையோ பொறுத்தது அல்ல; அது உங்களது குண நலன்கள், உங்களது மன உறுதி மேலும் இறை அருளைப் பொறுத்தே இருக்கும்.
வாழ்க்கை ஒரு சவால், அதை எதிர் கொள்ளுங்கள்;
வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதை விளையாடுங்கள்;
வாழ்க்கை அன்பே வடிவானது,அதை அனுபவியுங்கள் - பாபா