azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Be eager and earnest to know more and more about the art of unperturbed happy living. One can advance only step by step and there is the danger of slipping down two steps when you climb one. What matters is the determination to climb, the resistance with which the tendency to slide is met, the yearning to rise, to progress, to conquer the lower impulses and instincts. If you have that, the hidden spring of power will surge up within you; the Grace of the Lord will smoothen your path. Keep the ideal before you; march on. Only those with ideals are respected and remembered with gratitude, for posterity.(Divine Discourse, Nov 25, 1959.)
தொல்லையற்ற, சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் கலையைப் பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வதில் ஆவலுடனும்,அக்கறையுடனும் இருங்கள். ஒருவர் படிப் படியாகத் தான் முன்னேற முடியும்; நீங்கள் ஒரு படி ஏறிய பின், இரண்டு படி சறுக்கிக் கீழே சரிந்து விடும் அபாயம் உள்ளது. மேலே ஏறுவதில் மன உறுதி, சரிந்து விடும் போக்கைச் சந்திப்பதில் காட்டும் எதிர்ப்பு,எழுச்சி பெற்று, முன்னேறி, கீழ்த்தரமான உந்துதல்கள் மற்றும் உணர்ச்சிகளை வெல்லுவதில் ஏக்கம் ஆகியவையே முக்கியமானவை.உங்களிடம் அது இருந்து விட்டால், மறைந்திருக்கும் ஆற்றல் எனும் ஊற்று உங்களுள் பொங்கி எழும்; இறைவனது கருணை உங்களது பாதையை சமன் செய்து விடும். சீரிய குறிக்கோளை உங்கள் முன் வையுங்கள்; முன்னேறுங்கள். சீரிய குறிக்கோளைக் கொண்டவர்கள் மட்டுமே, எதிர் காலத் தலைமுறையினரால், நன்றியுடன் நினைவு கூறப்பட்டு, மதிக்கப் படுகிறார்கள்.