azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You have immense capacities latent in you, waiting to be tapped and used. You have many talents that have to be brought to light. You feel the urge to love all beings, and to share your joy and grief with fellow beings; to know more and satisfy the curiosity of your intellect, to peep behind the awe and wonder that Nature arouses in you. You are able to gather information about all kinds of things from all comers of the world, but you are unaware of what happens in the comers of your own mind. You know who is who among all the rest, but you do not know the answer to the simple question, "Who am I?" Without knowing this, people go about rashly judging, labelling and even libelling others! Each one has to ask oneself and seek out the clue to this enigma of one’s reality.(Divine Discourse, Feb 19, 1964.)
When you know that nothing happens without His will, everything has a
value added to it. - Baba
உங்களுள், தட்டி எழுப்பி,பயன் படுத்துவதற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் மகத்தான திறன்கள், மறைந்து உள்ளன. வெளிக் கொண்டு வர வேண்டிய, பல திறமைகள் ,உங்களுக்கு இருக்கின்றன. அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்க வேண்டும் என்ற தாபத்தை நீங்கள் உணருகிறீர்கள்;உங்களது சந்தோஷங்களையும்,துக்கங்களையும் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அதிக விஷயங்களைத் தெரிந்து கொண்டு உங்களது புத்தியின் ஆர்வத்தைத் தணிக்கவும், இயற்கை உங்களுள் தூண்டும் பிரமிப்பு மற்றும் வியப்பிற்கு அப்பாற்பட்டு இருப்பவற்றை எட்டிப் பார்க்கவும், நீங்கள் விழைகிறீர்கள். உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும், எல்லா விதமானவற்றைப் பற்றிய தகவல்களை உங்களால் சேகரிக்க முடிகிறது;ஆனால் உங்களது சொந்த மனதின் மூலைகளில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவதில்லை. பிறர் அனைவரிலும், இவர் இன்னார், இவர் இன்னார் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கிறது; ஆனால்,'' நான் யார்? '' என்ற சாதாரண கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியவில்லை. இதையே தெரிந்து கொள்ளாது, மனிதர்கள் கண்மூடித்தனமாக பிறரை மதிப்பிடுவது, முத்திரை பதிப்பது ,ஏன் அவதூறு இழைக்கக் கூட செய்கிறார்கள்.ஒவ்வொருவரும் தங்களையே ஆராய்ந்து,ஒருவரது உண்மை நிலையின் புதிரை விடுவிப்பதற்கான தடயத்தைத் தேடுதல் வேண்டும்.
அவனன்றி ஒர் அணுவும் அசையாது என்று எப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ,அப்போதே ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி மதிப்பு கூடி விடுகிறது- பாபா