azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Great sages of the past, filled with immense sympathy for their fellowmen, laid down rules, regulations, limits and directions for daily life and conduct, so that one’s hand and brain, instincts and impulses may not turn against another, but may turn towards the ideals of Truth, Righteousness, Peace and Love. They declared that every action must be weighed in the balance and approved only if it cleanses the emotions and passions; it has to be cast aside if it curdles or fouls them. Bhaavashuddhi (purification of mental disposition) should be the fruit of every action. The worship of idols, rituals, vows and fasts, festivals and holy days - all these are designed to tame the wildness and train one to tread the straight path to self-realisation.(Divine Discourse, Oct 17, 1966.)
பண்டைய கால மாமுனிவர்கள், தங்களது சக மனிதர்கள் பால் கொண்ட அளவு கடந்த பரிவினால், ஒருவரது கரமும்,சிரமும்,உணர்வுகளும்,உந்துதல்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராகத் திரும்பாது, அதே சமயம், சத்தியம்,தர்மம்,சாந்தி மற்மும் ப்ரேமையை நோக்கித் திரும்பச் செய்வதற்காக,தினசரி வாழ்க்கை மற்றும் நடத்தைக்கான விதிமுறைகள்,வரையறைகள் மற்றும் வழிகாட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அவர்கள், ஒவ்வொரு செயலையும் சீர்தூக்கிப் பார்த்து, அவை உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும் தூய்மைப் படுத்துமானால் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; கெடுக்குமானால் அவற்றை ஒதுக்கி விட வேண்டும், என பறைசாற்றினர். '' பாவசுத்தியே '' ( உணர்வுகளின் தூய்மை ), ஒவ்வொரு செயலின் பலனாக இருத்தல் வேண்டும். சிலை வழிபாடு,பூஜைகள்,விரதங்கள் மற்றும் உபவாசங்கள், பண்டிகைகள் மற்றும் புனித நாட்கள் என்ற அனைத்தும், தறிகெட்டு அலையும் தன்மையை அடக்கி, ஒருவரை, தன்னை உணர்தல் என்ற நேர்பாதையில் நடக்கப் பயிற்சி அளிப்பதற்காகவே உருவாக்கப் பட்டுள்ளன.