azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

A hermit once met the Goddess of Cholera on the road, returning from a village where she had thinned the population. He asked her how many she had taken into her lap. She replied, "Only ten." But, truly speaking, the casualties were a hundred. She explained, "I killed only ten; the rest died out of fear!" Man is Aathmaswarupa (Self-embodied), that is, Abhayaswaruupa (Fearlessness-embodied). If only you know your real nature, you will give no room for weakness or cowardice. This is the main aim of culture - to cultivate mental calm and courage; to make everyone feel kinship with everyone else. You are born with the cry 'koham' (who am I?), on your lips; when you depart, you must have the declaration 'Soham' (I am He), on your smiling face.(Divine Discourse, Feb 17, 1964.)
Let all your daily tasks be an offering to God; do not classify some as ‘my work’and some as ‘His’ work. - Baba
ஒரு சந்நியாசி ஒரு முறை, காலரா தேவியை, அவள் ஒரு கிராமத்தின் ஜனத்தொகையைக் குறைத்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழியில் சந்தித்தார்.அவர் அவள் எவ்வளவு பேரைக் காவு கொண்டாள் எனக் கேட்டார். அவர் அதற்கு,'' பத்து பேரைத் தான்'' என பதில் அளித்தாள். உண்மையில் பார்த்தால், இறப்பு என்னவோ நூற்றுக் கணக்கில். அவள் விளக்கினாள், ''நான் பத்து பேரைத் தான் கொன்றேன்; மற்றவர் எல்லாம் பயத்தினாலேயே இறந்து விட்டனர் ! ''. மனித 'ஆத்மஸ்வரூபன்'', அதாவது '' அபயஸ்வரூபன்- அச்சமின்மையே உருவானவன் ''.நீங்கள் மட்டும் உங்கள் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டு விட்டால், பலஹீனத்திற்கோ, கோழைத்தனத்திற்கோ இடமளிக்க மாட்டீர்கள். இதுவே கலாசாரத்தின் முக்கியக் குறிக்கோள் - மன அமைதியையும், தைரியத்தையும் வளர்ப்பது; ஒவ்வொருவரும், மற்றவருடன் உறவு முறை கொண்டவர் என உணர வைப்பது. பிறக்கும் போது,'' நான் யார் ( கோஹம் )'' என்ற அழுகுரலை உங்கள் உதடுகளில் ஏந்தி நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்.; நீங்கள் இறக்கும் போது, உங்களது புன்னகை நிறைந்த முகத்தில் '' நான் இறைவனே ( ஸோஹம் )'' என்ற அறிவிப்பு இருக்க வேண்டும்.
உங்களது அன்றாட காரியங்களை இறைவனுக்கு அற்பணமாகச் செய்யுங்கள்; சிலவற்றை,'' இவை எனது செயல்கள் '' எனவும், சிலவற்றை, '' இறைவன் செயல் '' எனவும் பிரித்துப் பார்க்காதீர்கள் - பாபா