azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

A little unpaid debt will soon assume huge proportions through high rates of interest; a karma (action) however trite, done with intention to benefit by the fruit thereof will involve future births in order to eat the fruit. The scriptures recommend one to wipe off all outstanding balances of Karma through three clear steps: First, the execution of actions righteously, with the right mental attitude (Karma-Jijnasa). Then comes the observance of moral codes for the upkeep of society and the discharge of one's duties and obligations (Dharma-Jijnasa). Finally, chanting the name of the Lord (Namasmarana) and considering it as one’s primary spiritual practice (Brahma-Jijnasa). Take any name of the Lord that pleases you – the cleansing value, curative value and the sweetness is exactly the same. Namasmarana will make you stick to the thought of God.(Divine Discourse, Oct 17, 1966.)
Devotion to the Divine will give you prosperity, peace and bliss. - Baba
ஒரு சிறிய கடன்,அதிக வட்டி விகிதங்களின் மூலம் ,மிகப் பெரியதாகி விடுகிறது; கர்மா, எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,அதன் பலனை எதிர்பார்த்துச் செய்யப் படுமானானல், அந்தப் பலனை அனுபவிப்பதற்காக , பல எதிர்காலப் பிறவிகளுக்கு உள்ளாக்கி விடும். வேதங்கள் ஒருவரை , மிஞ்சி இருக்கும் கர்மாவை, முழுவதுமாக நீக்குவதற்கு, தெளிவான மூன்று வழிகளைப் பரிந்துரைக்கின்றன. முதலில்,அனைத்து செயல்களையும் தர்ம வழியில் , தர்ம மனப்பாங்குடன் ஆற்றுதல் ( கர்ம ஜிங்ஞாஸ). அடுத்து வருவது, சமுதாயத்தை முறைப் படுத்தும் ஒழுக்க நெறிகளைக் கடைப் பிடித்து, தனது பொறுப்புக்களையும், கடமைகளையும் ஆற்றுதல் ( தர்ம ஜிங்ஞாஸ). இறுதியாக நாமஸ்மரணை செய்து அதை ,தனது ஆன்மீக சாதனையின் முக்கியப் பங்காகக் கொள்ளுதல் ( ப்ரம்ம ஜிங்ஞாஸ ). உங்களுக்குப் பிடித்த எந்த இறை நாமத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் - அனைத்தின்,தூய்மைப் படுத்தி,துன்பம் துடைத்து,இனிமை அளிக்கும் திறன், ஒரே அளவுள்ளது தான். நாமஸ்மரணை, உங்களை இறைச் சிந்தனையில் ஆழ்ந்திருக்குமாறு செய்து விடும்.
இறை பக்தி உங்களுக்கு சம்பத்து,சாந்தி ,சந்தோஷங்களை அளிக்கும்- பாபா