azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Each heart is a Dharmakshethra (a warfield of righteousness), where there is a constant battle between the forces of good and evil. Why, the whole world is a Dharmakshethra. Hence it is very essential that every single child and mother, each and every one of you be devoted to Dharma (righteousness). The holy Bhagavad Gita begins with the word, ‘Dharmakshethrae’ and in the final chapter appears the phrase “Sarva Dharman Parithyajya”, meaning ‘give up all Dharma’. The significance of this is that through Dharma, you have to transcend Dharma. What is needed is the steadfast practice of righteousness. Scholarship and wealth are often burdens, they are indeed a handicap. Practice alone counts in spiritual matters.(Divine Discourse, Feb 18, 1964.)
ஒவ்வொரு இதயமும்,நல்ல மற்றும் தீய சக்திகளின் இடையே இடையறாது நடக்கும் போர்க்களமான, தர்மக்ஷேத்ரமே.ஏன்,இந்த உலகனைத்துமே ஒரு தர்மக்ஷேத்ரம் தான்.ஏனவே,ஒவ்வொரு குழந்தையும் ,தாயும், நீங்கள் ஒவ்வொருவரும், தர்மத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். புனிதமான ஸ்ரீமத் பகவத் கீதை, '' தர்மக்ஷத்ரே '' என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது; அதன் இறுதி அத்யாயத்தில்,'' அனைத்து தர்மங்களையும் விட்டுவிடு '' எனப் பொருள் படும் '' ஸர்வ தர்மான் பரித்யஜ்ய '' என்ற சொற்றொடர் வருகிறது. இதன் பொருள், தர்மத்தின் மூலமே,நீங்கள் தர்மத்தைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும் என்பதாகும். உறுதியுடன் தர்மத்தைக் கடைப்பிடிப்பதே, தற்போதைய தேவை. பாண்டித்யமும், பணமும் பொதுவாக சுமைகளே; அவைகள் உண்மையில் இடர்பாடுகளே. ஆன்மீக விஷயங்களில்,கடைப் பிடிப்பது மட்டுமே முக்கியமானதாகும்.