azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Today we bid farewell to the year gone by and welcome the new year. We pray that the new spring should confer on all beings longevity, health and goodness. Pleasant experiences and unpleasant memories of the previous year that linger in the mind, contain many good lessons. When one reviews the past year within oneself, one can realise how much time was spent selfishly and how much in service. It is not good to keep quiet when there are people around in the society facing hardships. If need be, you should give up japa and sadhana (Spiritual practices), and uplift such people through service and sacrifice. You should feel that Jana Seva is Janaardhana Seva (service to people is service to God).Those who seek the joy of liberation should burn selfishness in the fire of jnana (spiritual wisdom). (Divine Discourse, Mar 28, 1979.)
Make good use of time by recognising what is permanent and true in human life. - Baba
இன்று நாம் கடந்த ஆண்டை வழி அனுப்பி, புத்தாண்டை வரவேற்கிறோம். புத்தாண்டு,அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நன்மையும் அளிக்க வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம். நமது மனதில் ஊசலாடும் ,பழைய ஆண்டின் இனிமையான அனுபவங்களும்,கசப்பான நினைவுகளும், பல நல்ல பாடங்களைக் கொண்டுள்ளன. ஒருவர் தனக்குள்ளேயே கடந்த ஆண்டை அலசிப் பார்த்தால் ,எவ்வளவு நேரத்தை சுய நலத்திற்காகவும், எவ்வளவு நேரத்தை சேவையிலும் செலவழித்தார் என்பதை உணரலாம். சமுதாயத்தில், சுற்றியுள்ள மனிதர்கள் இன்னல்களை எதிர்கொண்டு இருக்கும் போது ,சும்மா இருப்பது நல்லதல்ல.தேவை என்றால், நீங்கள் ஜபம், தியானம் ,ஆன்மீக சாதனை ஆகியவற்றை விட்டு விட்டு, சேவையாலும், தியாகத்தாலும் இப்படிப் பட்ட மக்களை மேன்மைப் படுத்த வேண்டும். ஜன சேவையே, ஜனார்த்தனன் சேவை என்பதை நீங்கள் உணர வேண்டும். மோக்ஷத்தின் ஆனந்தத்தை நாடுபவர்,சுயநலத்தை,ஞானம் எனும் அக்னியில் எரித்து விட வேண்டும்.
மனித வாழ்வில் ,எது நித்ய ,சத்தியமானது என்பதை உணர்ந்து நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் - பாபா