azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

A mother fetching water from the well, will have a pot on her head, another on her hip and a third in her hand, and will be hurrying her way home, as she is always conscious of the infant in the cradle. If she forgets the infant, her gait slows down and she wanders around, chatting with all her friends. Similarly, if God, the Goal, is not cherished in the memory, one has to wander through many births and arrive home late. Hence keep the memory of the Lord and His glory, always with you. That will quicken your steps and you will arrive soon at the goal.( Divine Discourse, Feb 18, 1964.)
The God-centred person has three qualities: Purity, Perseverance and Patience. - Baba
கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரும் ஒரு தாய்,அவளது தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடம்,மூன்றாவது குடம் கையில் என்று வைத்துக் கொண்டு, வீட்டிற்கு விரைந்து வந்து கொண்டு இருப்பாள்;ஏனெனில்,அவளது எண்ணம் எல்லாம் எப்போதும் தொட்டிலில் இருக்கும் பச்சிளங் குழந்தை மீதே இருக்கும். அவள் குழந்தையை மறந்து விட்டால், அவளது நடை வேகம் குறைந்து விடும் ; அங்கும் ,இங்கும் திரிந்து அவளது எல்லா நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருப்பாள். அதைப் போலவே, இறைவன் என்ற குறிக்கோளை சிந்தனையில் கொள்ளாவிடில்,ஒருவர் பல பிறவிகள் எடுத்துத் திரிந்து, வீட்டிற்குத் தாமதமாகவே வந்து சேர முடியும்.எனவே இறைவனைப் பற்றிய சிந்தனையையும்,அவனது மாட்சிமையையும் உங்களுடன் எப்போதும் வைத்திருங்கள். அது உங்களது காலடிகளை விரைவு படுத்தும் ; நீங்கள் இலக்கை விரைவாகச் சென்று அடைவீர்கள்.
இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவருக்கு மூன்று குணங்கள் இருக்கும் -தூய்மை,விடாமுயற்சி மற்றும் பொறுமை - பாபா