azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

There are learned scholars who spend a good deal of time in arguing that this form of God is superior to the other. This delusion has caused great harm. The truth is that each reveals a certain phase of Divinity. The comparison itself diminishes the integrity of any scholar! Anyone who has reverence for God, would not attempt at intellectually estimating the power of the Lord, they would, in fact, earnestly try to get an intuitive experience of the Divine! Harmony is the test of any religious outlook; if it breeds hate or faction or pride, the outlook is definitely evil. Keep away from these, if you are interested in your spiritual practice.(Divine Discourse, Feb 3, 1964.)
Spiritual Practice (Sadhana) is constantly cultivating good thoughts and undertaking good deeds. - Baba
படித்த பல பண்டிதர்கள், ஒரு இறைரூபம் மற்றவற்றை விட உயர்ந்தது என விவாதிப்பதில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். இந்த மாயை அதிகமான தீங்கை விளைவித்துள்ளது.உண்மை என்னவெனில் ஒவ்வொன்றும், தெய்வீகத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் காட்டுகிறது. இப்படிப் பட்ட ஒப்பிடுதல்களே ஒரு பண்டிதரின் நேர்மையை குறைத்து விடுகின்றன ! இறைவன் மீது பெருமதிப்பு கொண்ட எவரும் இறைவனது மஹிமையை புத்தியின் வழியாக மதிப்பிட முயல மாட்டார்கள்; மாறாக, தெய்வீக அனுபவத்தை, உள்ளுணர்வாகப் பெறுவதற்கு மனதார முயல்வார்கள். எந்த ஒரு மதத்தின் நோக்கமும் இசைவே;அது த்வேஷத்தையோ அல்லது பிரிவையோ அல்லது தற்பெருமையையோ வளர்ப்பதாக இருந்தால், அந்த நோக்கம் தீமையானதே. நீங்கள், உங்களது ஆன்மீக சாதனையில் நாட்டம் கொண்டவர்களாக இருந்தால் இப்படிப் பட்டவற்றிலிருந்து விலகி இருங்கள்.
ஆன்மீக சாதனை என்பது எப்போதும் நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டு,நற்செயல்களைச் செய்வதே ஆகும். - பாபா