azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 26 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 26 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Repetition of God’s Name is the process by which the dedicatory attitude can be cultivated and grown. When confronted by a calamity, you must attach yourself to this spiritual practice, even more firmly, instead of losing faith in it and getting slack. Do not give up the medicine, when you need it the most! The pity is that when most people face the first disappointment, they lose courage and confidence, and give up their Lord! There are also others, who call out the Names of the Lord, when they are displeased with some happenings, or when they are depressed, in a tone indicative of disgust, uttering it with a sigh or a groan. This is very incorrect. The Name of the Lord must always be pronounced with joy, gratitude, exultation and remembering Him in all splendour. Call Him with Love, call Him with a heart full of sincere yearning.(Divine Discourse, Oct 15, 1966.)
The person devoted to God knows no failure. The Name of the Lord, when taken sincerely overcomes all obstacles. - Baba
நாமஸ்மரணை,அர்ப்பணிப்பு மனப்பாங்கை பயிரிட்டு வளர்ப்பதற்கான முறையாகும். பெருந்துயரத்தை எதிர்கொள்ள நேரும்போது, நம்பிக்கை இழந்து, தளர்ந்து விடுவதற்கு பதில், நீங்கள் இந்த ஆன்மீகப் பயிற்சியில் மேலும் உறுதியாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். உங்களுக்கு மிக அதிகமாகத் தேவைப் படும் நேரத்தில் மருந்தைக் கைவிட்டு விடாதீர்கள் ! பரிதாபம் என்ன என்றால்,பலர் முதல் ஏமாற்றத்தை எதிர் கொண்டவுடனேயே, தைரியத்தையும்,தன்னம்பிக்கையையும் இழந்து,தங்கள் இறைவனைக் கை விட்டு விடுகிறார்கள் ! மேலும் பலர்,எப்போது சில நிகழ்வுகளால் அதிருப்தி அடைகிறார்களோ அல்லது மனச்சோர்வு அடைகிறார்களோ, வெறுப்பை வெளிப்படுத்தும் குரலில், ஒரு பெருமூச்சு அல்லது ஒரு புலம்பலுடன் இறைவனது நாமத்தை அழைக்கிறார்கள்.இது மிகவும் சரியல்ல.இறை நாமத்தை எப்போதும், ஆனந்தமாக,நன்றி உணர்வுடன், பெருமிதத்துடன் கூற வேண்டும்; அவனை அனைத்து காந்தியுடன் நினைக்க வேண்டும். அவனை அன்புடன் அழையுங்கள்; உளமார்ந்த தாபத்துடன் அழையுங்கள்.
இறைவனது பக்தன் தோல்வி அறியான்.உளமார ஏற்றுக் கொள்ளும் போது, இறை நாமம் அனைத்துத் தடைகளையும் தகர்த்து விடும் - பாபா