azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In the world today all those who are held in high esteem as great personages, have earned their good name only by their character and conduct. To accomplish anything, one should have a firm determination. All religions and scriptures agree that helping fellow-beings in times of need and saving them from distress is the greatest virtue. Every human being has equal rights in the world, for Divinity is present in all. To enjoy peace of mind, it is essential to practice forbearance and equanimity. Good and bad, rich and poor, educated and uneducated exist in every country. Even though born in the same family, some are narrow minded and have crooked ideas and indulge in selfish deeds, while others are noble and selfless. To be friendly towards all beings and do good with love is the primary duty of all.(Divine Discourse, Dec 25, 1992.)
See Good, Do Good and Be Good. This is the way to God. - Baba
இன்றைய உலகில் ஆன்றோர்கள் என உயர்ந்த நிலையில் மதிக்கப் படும் அனைவரும், தங்களது நற்குணங்கள் மற்றும் நன்னடத்தையின் மூலமே , தமது நற்பெயரைப் பெற்றுள்ளார்கள். எதைச் சாதிக்க வேண்டும் என்றாலும் ஒருவருக்கு திடமான உறுதி இருக்க வேண்டும்.அனைத்து மதங்களும்,புனித நூல்களும், தேவைப் படும் நேரங்களில் சக மனிதருக்கு உதவி செய்து, அவர்களைத் துயரத்திலிருந்து காப்பாற்றுவது தலை சிறந்த நற்பண்பாகும் என ஏற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே மாதிரியான உரிமை இவ்வுலகில் உள்ளது,ஏனெனில் தெய்வீகம் அனைவரிடமும் இருக்கிறது. மனச் சாந்தியை அனுபவிக்க வேண்டும் என்றால்,பொறுமையும்,சமநிலையான மனப்பாங்கும் இருத்தல் அவசியம். நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர்.ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,சிலர் குறுகிய மனப்பாங்குடன்,நேர்மையற்ற எண்ணங்களுடனும், சுயநலமான காரியங்களில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள்; அதே சமயம் மற்றவர்கள் சீரியவர்களாகவும் தன்னலம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்து ஜீவ ராசிகளிடனும் நட்புணர்வுடன் இருந்து, அன்புடன் நற்செயல்கைள ஆற்றுவது அனைவரின் தலையாய கடமையாகும்.
நல்லதையே கண்டு, நல்லவற்றையே செய்து, நல்லவர்களாக இருங்கள். அதுவே இறைவனை அடையும் வழியாகும் - பாபா