azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Jesus Christ gave the following example while teaching His fishermen disciples: ‘In a river the water is flowing in a swift current. But the tiny fishes are able to swim in it and move about merrily, despite the speed of the current. In the same river, a huge elephant caught in the rapids, is likely to get washed away or drowned in spite of its enormous size. The elephant just cannot survive there! The reason is: What you need for survival in a river is not being large, but the ability to swim. Likewise a person who is caught up in the ocean of worldly existence needs, not so much metaphysics, scholarship or wealth, as much as the grace of Divine love.’ Without any knowledge of Vedanta, one can still surmount all the problems of life if one is blessed with God's love. Hence, remember the Lord with Love, worship Him with Love and sanctify your life with Love.(Divine Discourse, Dec 25, 1988.)
ஏசு பகவான் அவர்கள், தனது மீனவ சீடர்களுக்கு உபதேசிக்கும் போது கீழ்க்கண்ட உதாரணத்தைக் கூறினார்,''ஒரு ஆற்றில்,நீர் சுழற்சியுடன் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால், நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்த போதும் கூட, அதில் குட்டி மீன்கள் நீந்தி, ஆனந்தமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அதே ஆற்றில், ஒரு பெரிய யானை சுழலில் மாட்டிக் கொண்டால்,அது உருவத்தில் மிகப் பெரியதாக இருந்த போதும் கூட அநேகமாக இழுத்துச் செல்லப் படும் அல்லது மூழ்கி விடும். அந்த யானை அதில் உயிர் வாழ முடியாது ! காரணம் என்ன என்றால்,ஆற்றில் பிழைத்துக் கொள்வதற்குத் தேவை பெரிய உருவம் அல்ல,நீந்தக் கூடிய திறன்.அதைப் போலவே,இந்த உலகம் என்ற கடலில் மாட்டிக் கொண்டுள்ள ஒருவருக்கு, இறை அன்பின் அருள் தேவைப் படும் அளவிற்கு, வேதாந்தமோ, பாண்டித்தியமோ, செல்வமோ தேவைப் படுவது இல்லை.'' வேதாந்தத்தின் அறிவில்லாவிடினும், இறையன்பின் அருள் மட்டும் இருந்து விட்டால், ஒருவர் வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்.எனவே, இறைவனை அன்புடன் நினைவு கூறுங்கள்,அவனை அன்புடன் வழிபடுங்கள், உங்கள் வாழ்க்கையை அன்பினால் புனிதமடையச் செய்யுங்கள்.