azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

A green gourd sinks in water, but a dry one floats. Become dry - rid yourselves of attachments, desires, and avoid anxieties and worries. Then you can float unaffected on the waters of change and chance. Even water, when it becomes steam, can rise into the sky. Be free from the desires that drag you down; have only the yearning to come face to face with the Truth. The truth is shining inside you, waiting to be discovered. God is your Indweller and so when you seek Him outside, He cannot be caught. Look for Him within you. Love Him with no other thought, and feel that without Him, nothing is worth anything. Feel that He is all. Then you become His and He becomes yours. There is no kinship nearer than that!(Divine Discourse, Oct 17, 1966.)
ஒரு பச்சைப் புடலங்காய் தண்ணீரில் மூழ்கி விடுகிறது,ஆனால் உலர்ந்த ஒன்றோ மிதக்கிறது.உங்களது பற்றுதல்கள்,ஆசைகள் ஆகியவற்றை விடுத்து, கலக்கங்களையும்,கவலைகளையும் தவிர்த்து,உலர்ந்தவராக ஆகி விடுங்கள். பின்னர் மாற்றங்களும் ,சந்தர்ப்பங்களும் கொண்ட நீரில் பாதிக்கப் படாது, நீங்கள் மிதக்க முடியும். தண்ணீர் கூட நீராவியாக மாறும் போது உயர ஆகாயத்தில் எழுகிறது. உங்களைக் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் ஆசைகளிலிருந்து விடுதலை பெறுங்கள்; சத்தியத்தை நேருக்கு நேர் காண வேண்டும் என்ற தாபத்தை மட்டும் கொண்டிருங்கள்.சத்தியம் உங்களுள் ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது ;நீங்கள் கண்டு பிடிக்க வேணடும் எனக் காத்துக் கொண்டு இருக்கிறது. இறைவன் உங்களுள் உறைபவன்; எனவே நீங்கள் வெளியில் தேடினால்,அவனைப் பிடிக்க இயலாது.அவனை உங்களுள் தேடுங்கள்.வேறு எந்த எண்ணமும் இன்றி அவனை நேசியுங்கள்; அவனில்லை எனில் எதுவும் மதிப்பற்றது என்பதை உணருங்கள்.அவனே அனைத்தும் என்ற உணர்வைக் கொண்டிருங்கள். பின்னர் நீங்கள் அவனுடையவராகவும்,அவன் உங்களுடையவராகவும் ஆகி விடுவீர்கள்.அதை விட நெருங்கிய உறவு எதுவும் இல்லை.