azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The highest spiritual discipline is to follow assiduously the instructions of the Master. Years and years of rigorous training make a soldier, who can then stand all the rigours of warfare. The heroic fighter was not made in a day. Restrictions, regulations, drills and techniques laid out for him, were practised for a long time. So too, the practising spiritual aspirant, who can win victories in life, cannot be made in just a day! Understand this and seize your opportunity in this life; put it to full use. You will need to come and merge in the Divine, if not in this birth, at least in ten more births. Hence, do not let go of the opportunity and strive most earnestly, from today, to acquire the Lord’s Grace. The Compassionate Lord will certainly bestow Grace upon you as a reward for your spiritual practices.(Divine Discourse, Feb 12, 1964)
மிக உயர்ந்த ஆன்மீகக் கட்டுப்பாடு என்பது இறைவனின் ஆணைகளை இம்மியும் தவறாது பின்பற்றுவதே ஆகும். பல வருடங்களாக செய்யப் பட்ட தீவிரப் பயிற்சி ஒரு ராணுவ வீரனை உருவாக்கி, போரின் அனைத்து கடினங்களையும் அவர் தாங்க முடியுமாறு செய்கிறது. ஒரு தலை சிறந்த போராளி ஒரு நாளில் உருவாக்கப் படுவதில்லை.அவனுக்கு என்று விதிக்கப் பட்ட கட்டுப் பாடுகள்,விதி முறைகள், கடுமையான பயிற்சிகள் மற்றும் உத்திகள், நீண்ட காலம் பயிலப் படுகின்றன.அதைப் போலவே,வாழ்க்கையில் வெற்றிகளை அடையக் கூடிய ஆன்மீக சாதகனையும் ஒரே நாளில் உருவாக்க இயலாது !இதைப் புரிந்து கொண்டு, இந்த வாழ்க்கை எனும் வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்;அதை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ,இந்தப் பிறவியில் இல்லா விடினும்,அடுத்த பத்துப் பிறவிகளிலாவது, இறைவனுடன் ஒன்றரக் கலந்தே ஆக வேண்டும். எனவே, இந்த வாய்ப்பினை நழுவ விட்டு விடாது, இன்றிலிருந்து, மனமார இறைவனது அருளைப் பெறுவதற்குப் பாடுபடுங்கள்.கருணையே உருவான இறைவன், உங்களது ஆன்மீக சாதனைகளின் பரிசாக அவனது அருளை அளித்திடுவான்.