azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Man is the monarch of all animals. Though the elephant lives longer, the lion is more fierce, the eagle more far-seeing, the cock more punctual in early rising, the cow more imbued with the spirit of sacrifice and so on, human birth alone has in it, the potentialities that can be brought out by proper culture. You are born with a helpless lamenting cry; you should die with a smile of joy. That is the purpose of the years between. But those years are wasted now. People are tossed about from one want to another, one grief to another, until they are blinded by despair and exhausted by foiled pursuits. Most illnesses are due to this despair and exhaustion. God alone is your anchor, who will save you from stress and storm. Do not neglect or ignore Him in your life.( Divine Discourse, Oct 15, 1966.)
Be a servant of God – then, all strength and joy will be added unto you. - Baba
மனிதன் அனைத்து மிருகங்களின் சக்ரவர்த்தி போன்றவன்.யானை அதிக காலம் வாழ்ந்தாலும்,சிங்கம் அதிகம் கடுமையானதாக இருந்தாலும்,கழுகு அதிக தூரம் பார்க்கக் கூடியதாக இருந்தாலும்,காகம் அதிகாலையில் எழுவதில் நேரம் தவறாததாக இருந்தாலும்,பசு அதிகமான தியாக உணர்வு கொண்டதாக இருந்தாலும் கூட,மனிதப் பிறவியில் தான் தனது திறமைகளை எல்லாம் முறையான பண்பாட்டின் மூலம் வெளிக் கொணருவதற்கான திறன் உள்ளது. நீங்கள் ஆதரவற்ற அழுகுரலோடு பிறக்கிறீர்கள்;நீங்கள் ஆனந்தப் புன்முறுவலோடு இறத்தல் வேண்டும். இடையில் உள்ள வருடங்களின் நோக்கம் அதுதான். ஆனால் அந்த வருடங்கள் இன்று வீணடிக்கப் படுகின்றன. மனிதர்கள், நம்பிக்கை இன்மையால் குருடாகி,தோல்வியுற்ற முயற்சிகளானால் தளர்ந்து போகும் வரை, ஒரு ஆசையிலிருந்து மற்றொன்றிற்கும்,ஒரு துயரத்திலிருந்து மற்றொன்றிற்கும் புரட்டி எடுக்கப் படுகிறார்கள். இந்த நம்பிக்கை இழப்பும்,தளர்ச்சியுமே பல நோய்களுக்குக் காரணம். புயலிலும், மன அழுத்தத்திலும் உங்களைக் காக்கும் நங்கூரம் இறைவனே. அவனை உங்கள் வாழ்க்கையில் கைவிடவோ, உதாசீனப் படுத்தவோ செய்யாதீர்கள்.
இறைவனின் சேவகனாக இருங்கள்- பின்னர் அனைத்து சக்தியும் ஆனந்தமும் உங்களுக்கு அளிக்கப் படும் - பாபா