azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You know only the present that is happening before your eyes; you do not realise that the present is related to the past and is preparing the course of the future. Each birth wipes out the memory of the one already experienced. The tree came from the seed and the seed from the tree and so on. You may not know which came first, tree or seed, but you can easily put an end to the cycle by frying the seed. You do not realise that the end of this cycle of birth and death lies in your own hands. The scriptures and holy books serve this very purpose. These are not meant to mislead you. That is not the desire of the sages who wrote down these annals and their own experiences. It is to tell mankind the truth about oneself.(Divine Discourse,Feb 12, 1964.)
Close your mouths and open your hearts. Then you will easily experience
the bliss of the Divine. - Baba
உங்கள் கண்களுக்கு முன்னால் நடக்கும் நிகழ்காலத்தை மட்டுமே நீங்கள் அறிவீர்கள்;இந்த நிகழ்காலம்,கடந்த காலத்துடன் சமபந்தப் பட்டது ,மேலும் எதிர்காலத்தின் பாதையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வதில்லை.ஒவ்வொரு பிறப்பும்,அதற்கு முன் அனுபவித்த பிறவியின் நினைவுகளை நீக்கி விடுகிறது. மரம் விதையிலிருந்தும்,விதை மரத்திலிருந்தும் எனப் போய்க் கொண்டே இருக்கிறது.மரமா,விதையா ,எது முதலில் வந்தது என்று உங்களுக்குத் தெரியாது;ஆனால், நீங்கள், இந்த சுழற்சியை ,அந்த விதையை வறுத்து விடுவதன் மூலம் எளிதாக முடிவுக்குக் கொண்டு வர முடியும்.பிறப்பு,இறப்பு என்ற இந்த சுழற்சியின் முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லை.வேதங்களும் , புனித நூல்களும் இந்தத் தேவையைத்தான் பூர்த்தி செய்கின்றன.அவை உங்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் நோக்கம் படைத்தவை அல்ல. இந்த வரலாற்றுப் பட்டியல்களையும்,தங்கள் அனுபவங்களையும் எழுதிப் பதிவு செய்த முனிவர்களின் விருப்பமும் அதுவல்ல. மனித குலத்திற்கு, தன்னைப் பற்றிய சத்தியத்தை எடுத்துக் கூறுவதற்காகவே அவை உள்ளன.
உங்கள் வாய்களை மூடி, இதயங்களைத் திறவுங்கள். பின்னர் நீங்கள் தெய்வீகத்தின் பேரானந்தத்தை எளிதாக அனுபவிக்க முடியும்- பாபா