azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Three fishes lived in a pond. One told the other two that the water was drying up and they should leave before it was too late. The first fish decided to leave the pond immediately, the second said it could save itself when the contingency arose and the third fish ignored it. In due course, the second and third fish were caught by a fisherman. The second fish managed to break through the net and escape, the third one resigned its fate to destiny. God of Death, Yama is the fisherman; unless early notice is taken of the process of drying to which the tank of one's lifespan is subject, one gets caught. Migrate into the sea of Grace, which will not dry; or learn the art of breaking through the net of death. Discard sloth and slumber, denounce fanaticism and make yourself a dedicated servant of the Lord. Then all strength, joy and Grace will be showered on you.(Divine Discourse, Oct 15, 1966.)
So long as one is drawn to the pleasure of the senses, it cannot be said that their spiritual life has begun. - Baba
மூன்று மீன்கள் ஒரு குளத்தில் வசித்து வந்தன. ஒரு மீன் ,மற்ற இரண்டிடம், தண்ணீர் வற்றிவிடும் போல இருக்கிறது; காலம் கடந்து விடும் முன்,அவர்கள் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்று கூறியது. முதல் மீன் உடனே குளத்தை விட்டுச் சென்று விட முடிவு எடுத்தது,இரண்டாவது மீன், பிரச்சனை வரும்போது ,தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றது; மூன்றாவது மீனோ அதை உதாசீனப் படுத்தியது. நாளடைவில் அந்த இரண்டாவது ,மூன்றாவது மீன்கள் ஒரு மீனவனால் பிடிக்கப் பட்டு விட்டன. இரண்டாவது மீன் எப்படியோ அந்த வலையிலிருந்து வெளி வந்து ,தப்பிக் கொண்டது; மூன்றாவது மீனோ தனது தலைவிதிப்படி நடக்கட்டும் என்று இருந்து விட்டது. இறப்பின் கடவுளான யமனே அந்த மீனவன்;ஒருவரது வாழ்நாள் என்ற குளம் உள்ளாகும் வரட்சியைப் பற்றி முன்பே கவனிக்காவிடில், ஒருவர் பிடிபட்டுப் போகிறார். வரட்சியே ஆகாத இறை அருள் என்ற சமுத்திரத்திற்கு மாறி விடுங்கள்; அல்லது இறப்பு என்ற வலையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். சோம்பலையும், அதிக உறக்கத்தையும் விடுத்து, வெறித் தனத்தைக் கண்டனம் செய்து, உங்களை இறைவனின் ஆத்மார்த்த சேவகனாக ஆக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அனைத்துத் திறன்களும்,ஆனந்தமும்,அருளும் உங்கள் மீது பொழியப் படும்.
புலனின்பங்களால் ஒருவர் ஈர்க்கப்படும் வரை, அவர்களது ஆன்மீக வாழ்க்கை தொடங்கி விட்டது எனக் கூற இயலாது- பாபா