azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Have you heard the story of the rabbit that borrowed from Mother Earth four paisa (pence)? The rabbit thought to itself, “If I run away as far as I can, from the place I received the loan, I will be free from the obligation”. So one day, the rabbit ran as fast as its legs could carry it. After a while, it sat down in great relief thinking, “Now no one will ask me to repay.” The rabbit was shocked, for at that very moment, it heard from the ground beneath, “Mother Earth is right under your feet! You cannot escape from me, however fast you run!” So too, you cannot run away from Divinity. Wherever you may go seeking refuge, the Lord demands good conduct, good habits, good thoughts and good company! Make use of this opportunity, accept this noble advice, select good company and strive sincerely to reach your goal!(Divine Discourse, Feb 11, 1964.)
Be always attentive to the signs of His Glory, His Mercy and His Omnipresence. - Baba
பூமாதாவிடமிருந்து, நான்கு பைசா கடன் வாங்கிய முயலின் கதையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்த முயல் ,'' நான் கடன் வாங்கிய இடத்திலிருந்து எவ்வளவு அதிக தூரம் என்னால் ஓடி முடியுமோ,அவ்வளவு தூரம் ஓடி விட்டால்,நான் அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்காதே '' என்று எண்ணியதாம். கொஞ்ச நேரம் கழித்து, '' இப்போது யாரும் என்னைக் கடனைத் திருப்பிக் கொடு எனக் கேட்க முடியாது '' என எண்ணி நிம்மதியாக உட்கார்ந்ததாம். அந்தக் கணத்திலேயே, அந்த இடத்தின் கீழிருந்தே, '' பூமாதா உன் காலடியில் தான் இருக்கிறாள்! நீ எவ்வளவு வேகமாக ஓடினாலும் என்னிடமிருந்து தப்ப முடியாது '' என்ற குரலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாம். அதைப் போலவே, நீங்களும் தெய்வீகத்திலிருந்து தப்பி ஒடி விட முடியாது. நீங்கள் எங்கு புகலிடம் தேடிச் சென்றாலும்,இறைவன் நன்னடத்தை,நற்பழக்கங்கள்,நல்லெண்ணம் மற்றும் நல்லோரின் சேர்க்கை ஆகியவற்றை கோருகிறான் ! இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த சீரிய அறிவுரையை ஏற்று, நல்லோரின் நட்பைத் தேர்ந்தெடுத்து, உங்களது குறிக்கோளை அடைவதற்காக மனதாரப் பாடுபடுங்கள் !
இறைவனது மஹிமை,அவனது கருணை,எங்கும் வியாபித்திருக்கும் அவனது தன்மை ஆகியவற்றிற்கான சின்னங்களைக் காண்பதில், எப்போதும் விழிப்புடன் இருங்கள்- பாபா