azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Divinity expresses itself infinitely as the five elements – the sky, the wind, the fire, the water and the earth. All creation is but a combination of two or more of these in varying proportions. The characteristic nature of these elements are sound, touch, form, taste and smell, cognized by the ear, the skin, the eye, the tongue and the nose. All the elements are abundant in Nature and are precious and potent with Divinity. So use them in moderation, reverentially, with humility and gratefulness. Excessive or inappropriate usage will injure your well-being just as drinking more or less water than needed is a torture. Inhaling more air is suffocating. Fire in moderation can warm or serve to heat and melt, but beyond a certain limit, it is a holocaust. Even excessive use of sound will distract people and drive them crazy. Hence, learn to use the natural resources intelligently, in moderation, with the idea of loving service to all in the community.(Divine Discourse, Oct 15, 1966.)
ஆகாயம்,காற்று,நெருப்பு,நீர் மற்றும் நிலம் என்ற பஞ்ச பூதங்களாக, தெய்வீகம் முடிவின்றி தன்னை வெளிப்படுத்துகிறது. இந்தப் படைப்பு அனைத்தும்,இவற்றில் இரண்டு அல்லது அதற்கு அதிகமானவை, பலப்பல விகிதாசாரத்தில் இணைந்து உருவானவையே. இவற்றின் தன்மைகளான ஒலி,ஸ்பரிசம்,உருவம்,சுவை மற்றும் மணம் ஆகியவை முறையே செவி,சருமம்,கண்,நாக்கு மற்றும் மூக்கின் மூலம் உணரப்படுகின்றன. இந்த பஞ்ச பூதங்கள் இயற்கையில் ஏராளமாக உள்ளன;அவை விலை மதிப்பற்றவை மேலும் தெய்வீக சக்தி வாய்ந்தவை. எனவே, அவற்றை மிதமாகவும், கண்ணியத்துடனும்,பணிவுடனும்,நன்றி உணர்வோடும் பயன்படுத்துங்கள். எவ்வாறு தேவைக்கு அதிகமாக அல்லது குறைவாக நீர் அருந்துவது சித்திரவதையாகிறதோ, அளவின்றியோ அல்லது முறையற்றோ இவற்றை பயன்படுத்துவது உங்களது நலனுக்கு ஊறு விளைவிக்கும்.அதிகமாகக் காற்றை சுவாசித்தால் மூச்சுத் திணறுகிறது.மிதமான நெருப்பு,இளஞ்சூடாக்கி அல்லது உஷ்ணப் படுத்தி உருக்க உதவும்;ஆனால் ஒரு அளவிற்கு மேல் அதுவே பேரழிவு ஆகிவிடும். அதிகமாக ஒலியைப் பயன்படுத்துவது கூட மனிதர்களைக் குழப்பி ,பித்துப் பிடிக்க வைத்து விடும். எனவே,இயற்கை வளங்களை புத்திசாலித்தனமாகவும்,மிதமாகவும் , சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அன்புடன் சேவை ஆற்றும் நோக்கத்துடனும், உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.