azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 07 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 07 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

A judge of the Supreme Court may, while at home play with his grandchild and bend on all fours for the little fellow to mount his back. He may crawl around on the floor while the child rides him; but all the while, his status as a judge does not suffer diminution, nor does he forget it. So too you must always be conscious of the high calling for which you have come. You should not disgrace it by any means or through any meaningless act or thought or word. I have come to give you the courage and confidence to conceive yourself as the Supreme Truth (Paramathma) you really are, to give you the intellectual power (dhee shakthi) to grasp the reality. These alone can destroy the delusion born of ignorance.(Divine Discourse, Feb 11, 1964).
ஒரு தலைமை நீதி மன்ற நீதிபதி வீட்டில் தனது பேரக்குழந்தையுடன் விளையாடும் போது,அந்தச் சிறு பிள்ளை முதுகில் ஏறுவதற்குத் தக்கவாறு நான்கு கால்களையும் மடித்துக் கொண்டு இருக்கலாம்.அந்தக் குழந்தை அவர் மீது சவாரி செய்யும் வரை அவர் தரையில் தவழலாம்; ஆனால்,அந்த எல்லா சமயத்திலும் நீதிபதி என்ற அவரது அந்தஸ்து குறைவதும் இல்லை; அதை அவர் மறப்பதும் இல்லை. அதைப் போலவே, நீங்கள் வந்துள்ள மிக உயர்ந்த நிலைக்கான அறைகூவலை பற்றிய உணர்வு எப்போதும் உங்களுக்கு இருத்தல் வேண்டும். அதை, எந்த வழியிலோ அல்லது எந்த அர்த்தமற்ற செயல், எண்ணம் அல்லது சொல் மூலமாகவோ, இழிவு படுத்தி விடக் கூடாது. உங்களது உண்மை நிலையான, பரமாத்மாவே நீங்கள் என்ற உயர்ந்த சத்தியத்தை உணர்வதற்குத் தேவையான துணிவையும்,நம்பிக்கையையும் உங்களுக்கு அளித்து,அதைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான புத்தி கூர்மையையும் அளிப்பதற்காகவே , நான் வந்துள்ளேன்.இவை மட்டுமே , அறியாமையினால் தோன்றும் மாயையை அழிக்க வல்லவை.