azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Turn the key in the lock to the left, it locks. Turn it to the right, it opens. So too, turn your mind towards the objective world, it gets locked, caught and deeply entangled. Turn it to the right, steer it away from the objects of senses, and the lock opens up, you are free and deliverance is in your hands! How to turn your mind to the right? Begin with remembering the Lord’s Holy Name (Naamasmarana) as your first step. A big and long journey begins with the first step. The first step itself will take you through to the second and third, and ultimately to realizing your destination or goal.(Divine Discourse, Feb 3, 1964.)
To evoke the Divine in you, there is no better method than Namasmarana. - Baba
பூட்டின் சாவியை இடது பக்கம் திருப்பினால் அது பூட்டிக் கொள்கிறது. அதையே வலது பக்கம் திருப்பினால் அது திறந்து விடுகிறது. அதைப் போலவே ,உங்கள் மனதை பொருட்களாலான உலகத்தின் பக்கம் திருப்பினீர்களானால் அதுவும் பூட்டப்பட்டு, மாட்டிக் கொண்டு, வசமாகச் சிக்கிக் கொள்கிறது. அதை சரியான பக்கம் திருப்புங்கள்,புலன்களை ஈர்க்கும் பொருட்களிலிருந்து அதை, விலக்கி எடுத்துச் சென்றால், பூட்டு திறந்து கொள்கிறது, நீங்கள் சுதந்திரம் பெறுகிறீர்கள்; விடுதலை உங்கள் கையிலேயே இருக்கிறது! மனதை எவ்வாறு சரியான பக்கம் திருப்புவது? உங்களது முதல் படியாக, இறைவனது புனித நாமத்தை நினைவு கூறச் செய்யும் நாமஸ்மரணையிலிருந்து தொடங்குங்கள். பெரிய,நீண்ட பயணம் முதல் படியிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. முதல் படியே உங்களை இரண்டாவது, மூன்றாவது படிகள் வழியாக இட்டுச் சென்று இறுதியாக உங்களது இலக்கை அடையச் செய்து விடும்.
உங்களுள் உள்ள தெய்வீகத்தைத் தூண்டுவதற்கு நாமஸ்மரணையை விடச் சிறந்த வழி எதுவும் இல்லை - பாபா