azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When a plane flies across the sky, it leaves no mark on it, no streak that lasts, no furrow or pot-hole that interferes with the next plane in that path. So too, let any or all feelings or emotions cross your mind, but never allow any of them to cause an impression. You can accomplish this by inquiry, quiet reasoning within oneself. This method is more effective than listening to lectures or studying books. Little children are trained to walk by means of a three wheeled contraption. The Pranava is such an instrument, the three wheels being the syllables A U and M. Holding it, you can learn to use your feet of devotion and detachment. If one walks on with the help of this Pranava meditation, one can certainly realise the glory of the Divine, which is the very substance of the Universe.(Sathya Sai Speaks, Vol VI, Ch 27.)
ஒரு ஆகாய விமானம் வானத்தில் பறக்கும் போது, எந்த சுவடையும் அதில் விட்டுப் போவதில்லை, நிலையான எந்தக் கீறலையையும் ஏற்படுத்துவது இல்லை, அதே வழியில் செல்ல இருக்கும் அடுத்த விமானத்தின் பாதையில் குறுக்கிட வல்ல பள்ளத்தையோ,குழியையோ உண்டாக்குவதில்லை.அது போலவே, எந்தவிதமான அல்லது அனைத்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் உங்களது மனதில் தோன்றட்டும்; ஆனால், அவற்றில் எதையும் மனதில் எந்த பதிவையும் ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். இதை நீங்கள், உங்களுள்ளேயே அமைதியாக பகுத்து ஆராய்வதன் மூலம் செய்ய இயலும். இந்த முறை, உபன்யாசங்களைக் கேட்பது அல்லது புத்தகங்களைப் படிப்பது ஆகியவற்றை விட அதிக பயன் அளிப்பதாகும். சிறு குழந்தைகளுக்கு மூன்று சக்கர நடைவண்டி ஒன்றின் மூலம் நடை பழகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ப்ரணவ மந்திரமே ( ௐ ) அந்த நடை வண்டி. 'அ', ' உ', 'ம' என்ற எழுத்துக்களே அதன் மூன்று சக்கிரங்கள். அதைப் பிடித்துக் கொண்டு நீங்கள், உங்களது பக்தி மற்றும் பற்றின்மை என்ற பாதங்களை உபயோகிக்கக் கற்றுக் கொள்ளலாம். ஒருவர் இந்த ப்ரணவ தியானத்தின் உதவியுடன் நடந்தால், இந்த பிரபஞ்சத்தின் சாரமான தெய்வீகத்தின் மேன்மையைக் கண்டிப்பாக உணர முடியும்.