azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Those who are trying to build the human community on the foundation of wealth (dhana) are like builders using sand as their foundation. Those who seek to build it on the rock of righteousness (Dharma) are the wise ones. Always remember that righteousness is the very root of this world. (Dharma Moolam Idham Jagath). Those who practice evil are cowards, they will constantly be haunted by fear and have no peace within them. Practice righteousness and you will remain happy forever. Respect for the parents who brought you into this world is the first lesson in right conduct. And gratitude is the spring which feeds that respect.(Divine Discourse, Feb 3, 1964.)
செல்வத்தை(தனத்தை) அடிப்படையாகக் கொண்டு மனித குலத்தை நிர்மாணிக்க முயல்பவர்கள், மணலை தமது அஸ்திவாரமாகப் பயன்படுத்தி கட்டிடம் கட்டுபவர்களைப் போன்றவர்கள். தர்மம் எனும் கல்லின் மீது கட்ட விழைபவர்களே புத்திசாலிகள்.தர்மமே இந்த உலகின் ஆணிவேர்( தர்ம மூலம் இதம் ஜகத் ) என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீமையைக் கடைப்பிடிப்பவர்கள் கோழைகள்;அவர்கள் எப்போதும் பயத்தினால் பீடிக்கப் பட்டு , மனச் சாந்தி இன்றி இருப்பார்கள்.தர்மத்தைக் கடைப்பிடியுங்கள், நீங்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பீர்கள்.இந்த உலகில் உங்களைக் கொண்டு வந்த பெற்றோரை மதிப்பது தர்மத்தின் முதல் பாடமாகும். மேலும், நன்றி உணர்வே அந்த மரியாதையை வளர்க்கும் நீரூற்றாகும்.