azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Education must train the children to love, to co-operate, to be brave in the cause of truth, to be helpful, to be sympathetic and to be grateful. Dear children! Revere your parents, elders and teachers, be humble before them and respect their experience and deeper love for you. You must follow these virtues consistently and strictly. The educators, elders and parents too, on their part, must cleanse their intelligence and practice the same virtues with humility and detachment. There is no use teaching the children one thing and holding out examples, contrary to the teachings. Thus, true learning occurs when noble truths are taught and supplemented by the conduct of the teachers, parents and the elders.(Sathya Sai Speaks, Vol VI, Ch 26.)
True education is that which bestows the wealth of morality, spirituality and character. - Baba
கல்வி என்பது சிறுவர்களுக்கு அன்பு செலுத்த,ஒத்துழைக்க,சத்தியத்திற்காக தைரியத்துடன் இருக்க,உதவி செய்ய, பரிவு காட்ட மேலும் நன்றி உணர்வுடன் இருக்க பயிற்சி அளிப்பதாக கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அன்புள்ள குழந்தைகளே! உங்கள் பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் போற்றி, அவர்கள் முன் பணிவுடன் நடந்து,அவர்களது அனுபவத்தையும், அவர்களுக்கு உங்கள் மீது உள்ள ஆழ்ந்த அன்பையும் மதியுங்கள். இந்த நற்குணங்களை சீராகவும் ,கண்டிப்பாகவும் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டும். கல்வியாளர்களும்,பெரியவர்களும்,பெற்றோரும் கூட, அவர்களது பங்கிற்கு, தங்களது புத்தியைத் தூய்மைப் படுத்திக் கொண்டு,இதே நற்குணங்களை பணிவுடனும், பற்றின்றியும் கடைப் பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒன்றை போதித்து விட்டு,அந்த போதனைகளுக்கு எதிரானவற்றின் உதாரணங்களாகத் திகழ்ந்தால்,எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு, உண்மையான கற்றுக் கொள்வது என்பது சீரிய உண்மைகள் போதிக்கப்பட்டு, பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்னடத்தையும் அவற்றோடு இணையும் போது தான் நிகழ்கிறது.
உண்மையான கல்வி ஒழுக்கம்,ஆன்மீகம் மற்றும் நற்குணங்கள் என்ற செல்வத்தை அளிப்பதாக இருக்க வேண்டும் - பாபா