azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Sand that has little grains of mica is valuable. But the sand, which has veins of gold, is much more precious. Thus, sand is valued according to the preciousness of the metal, which it has in its fold. Similarly, human hearts are evaluated by the contents therein. Keep God in your hearts. That is the best way to make your heart the most precious of your possessions. When God is installed in the heart, you will see only God everywhere, even in the objective world. The influence of God is such that even as you contemplate on Him, all traces of envy and greed will disappear from the mind.(Divine Discourse, Jan 14, 1964.)
There is no temple dearer to God than the human heart. - Baba
சில மைக்கா துகள்கள் கொண்ட மணல் மதிப்புள்ளதாகி விடுகிறது. ஆனால்,தங்கப் படிகங்கள் கொண்ட அதே மணல்,மிக அதிக மதிப்புள்ளதாகி விடுகிறது. அதாவது, அதில் இருங்கும் விலை மதிப்புள்ளவற்றைக் கொண்டே மணலின் மதிப்பு கணக்கிடப் படுகிறது. அதைப் போன்றே,மனித இதயமும் அதனுள் உள்ளவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.இறைவனை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள்.அதுவே, உங்கள் இதயத்தை உங்களது சொத்துகளில் எல்லாம், மிக உயர்ந்த விலை மதிப்புள்ளதாக ஆக்குவதற்கான தலை சிறந்த வழி. இறைவனை இதயத்தில் கொலு வீற்றிருக்க வைத்துவிட்டால், பொருட்களாலான இந்த உலகத்தில் கூட எங்கும் இறைவனையே காண்பீர்கள்.இறைவனது தாக்கம் எப்படிப் பட்டதென்றால், அவனை நீங்கள் தியானிக்கும் போதே பொறாமை மற்றும் பேராசையின் சுவடுகள் மனதிலிருந்து மறைந்து விடும்.
மனித இதயத்தை விடப் பிரியமான ஆலயம் இறைவனுக்கு ஏதுமில்லை - பாபா