azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Many of you are wasting a lot of time in meaningless pursuits. Time wasted is life wasted. Our ancients considered God as the embodiment of time and extolled Him thus: Kalaya Namah, Kala Kalaya Namah (Salutations to the Embodiment of Time, the One who conquered and transcends time). Do not forget the truth that time is verily God. You eagerly wait for a Sunday, thinking that you can relax and enjoy. In fact, you should feel sad that you are wasting time without doing any work on a Sunday. Utilise your time in a proper way. If you do not have any work, undertake social service. When your feelings are pure, and you utilize your time well to perform noble actions, your life will be sanctified and all work you do will be transformed into worship.(Divine Discourse, 19 Nov 2002.)
உங்களில் பலர் அர்த்தமற்ற ஆர்வங்களில் அதிகமான நேரத்தை வீணடிக்கிறீர்கள். காலத்தை வீணடிப்பது,வாழ்க்கையையே வீணடிப்பது போன்றது. நமது முன்னோர்கள் இறைவனை காலத்தின் உருவமாகக் கருதி, அவரை '' காலாய நம:,கால காலாய நம:'' ( காலத்தின் உருவமான உன்னை வணங்குகிறோம்,காலத்தை வென்று காலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கும் உன்னை வணங்குகிறோம் '') எனப் போற்றினார்கள்.காலமே கடவுள் என்ற சத்தியத்தை மறக்காதீர்கள்.நீங்கள் ஓய்வெடுப்பதற்கும்,மகிழ்ச்சியாக இருப்பதற்கும், ஒரு ஞாயிற்றுக் கிழமையை ஆவலுடன் எதிர்நோக்குகிறீர்கள். உண்மையில் ஒரு வேலையும் செய்யாமல்,ஞாயிற்றுக் கிழமையில் நேரத்தை வீணடிக்கிறோமே என நீங்கள் வருத்தப் பட வேண்டும்.உங்கள் நேரத்தை முறையான வழியில் பயன்படுத்துங்கள். உங்களுக்கு வேறு வேலை இல்லை என்றால் சமூக சேவை ஆற்றுங்கள்.உங்களது எண்ணங்கள் தூய்மையாக இருக்குமானால், சீரிய செயல்களை ஆற்றுவதற்கு, உங்களது நேரத்தை நன்கு பயன்படுத்தினீர்களானால், உங்களது செயல் புனிதமடைந்து,நீங்கள் ஆற்றும் அனைத்து பணிகளும்,வழிபாடாக மாறிவிடும்.