azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Sensuous pleasures are momentary and leave a trail of pain behind. Yet most people, from the learned to the illiterate, seek only such fleeting and unreal pleasures (preyas). Hence, instead of seeking preyas, develop a desire for spiritual well-being (Shreyas). Surely there is a need for some concern about physical comforts. ‘Even the body is essential for the realisation of Dharma,’ says the scripture. The demands of the body have to be satisfied. Society has to be served. Family responsibilities have to be discharged. The body is the basis for all these. But this should not be the ultimate goal of life. Together with this, there should be the yearning for a higher Shreyas. All actions aimed at Spiritual bliss are related to Shreyas and it is when you yearn for Shreyas, that even preyas leads you to fulfilment.(Divine Discourse, 5 Mar, 1995.)
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will all be pure. - Baba
புலனின்பங்கள் தாற்காலிகமானவை,மேலும் அவை தமக்குப் பின் துன்பத்தின் சுவடுகளை விட்டுச் செல்கின்றன.இருந்தாலும்,பண்டிதரிலிருந்து பாமரர் வரை இப்படிப் பட்ட '' ப்ரேயஸ்'' எனப்படும் விரைந்தோடும்,போலியான இன்பங்களையே நாடுகின்றனர். எனவே, இந்த '' ப்ரேயஸை'' நாடுவதை விடுத்து, ஆன்மீக நலமான '' ஸ்ரேயஸை '' விரும்பும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஓரளவிற்கு உடலியலான சௌகரியங்கள் தேவைதான்.'' உடல் கூட தர்மத்தை அடைவதற்கு அத்தியாவசியமே'' என்கிறது வேதம்.உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்தாகவே வேண்டும்.இந்த சமுதாயத்திற்கு சேவை ஆற்றப்பட வேண்டும்.குடும்பத்தின் கடமைகளை ஆற்ற வேண்டும். உடலே இவை அனைத்திற்கான அடிப்படைத் தேவை. ஆனால்,இவையே வாழ்க்கையின் இறுதியான குறிக்கோளாக இருக்கக் கூடாது.இவற்றுடன் கூடவே, உயர்ந்த ''ஸ்ரேயஸை''அடைவதற்கான ஏக்கம் இருக்க வேண்டும். ஆன்மீக ஆனந்தத்தைக் குறித்து ஆற்றப்படும் அனைத்து செயல்களும் ,'' ஸ்ரேயஸிற்கு ''சம்பந்தப் பட்டவை; மேலும் நீங்கள் '' ஸ்ரேயஸை'' நாடும் போது, உலகியலான '' ப்ரேயஸ்'' கூட உங்களை மனநிறைவிற்கு இட்டுச் செல்லும் .
உங்கள் இதயங்கள் நல்லெண்ணங்களாலும்,நல் உணர்வுகளாலும் நிரம்பி இருக்கும் போது, புலன்களின் மூலம் வரும் அனைத்தும்-உங்கள் வாக்கு,உங்கள் நோக்கு,உங்கள் செயல் அனைத்தும் தூய்மையானதாகவே இருக்கும் - பாபா