azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Education is no book-worm affair; the process must include the study and appreciation of all trades and professions. It must encourage the acceptance of the good and the rejection of the bad. Spiritual education is not a distinct and separate discipline; it is part and parcel of all types and levels of education; in fact, it is the very foundation on which a lasting edifice can be built. Secular and spiritual education are like the two halves in the seeds of pulses; the germ that sprouts is in between and it is fed by both. Cultivate Love; sow the seeds of love in all hearts. Shower Love on the desert sands and let the green shoots, the lovely flowers, the luscious fruits and the sweet harvest of nectar be earned by all mankind.(Divine Discourse, 25 Jul, 1975.)
கல்வி என்பது புத்தகப் புழு விவகாரம் அல்ல;இந்த முறை எல்லாவிதமான தொழில்கள் மற்றும் வியாபாரங்களைக் கற்று அவற்றைப் போற்றுவதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.அது நல்லைவற்றை ஏற்று,தீயவற்றை ஒதுக்குவதை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.ஆன்மீகக் கல்வி என்பது ஒரு குறிப்பான ,தனிப்பட்ட கட்டுப்பாடு அல்ல;அது பல தரப்பட்ட கல்வியின் ஒரு அங்கமாகும்; உண்மையில் அதுவே நிரந்தரமான கட்டிடத்தை எழுப்புவதற்கான அஸ்திவாரமாகும். உலகியலான மற்றும் ஆன்மீகக் கல்வி ஒரே பருப்பு விதையின் இரண்டு பாதிகளாகும்; இதிலிருந்து முளைவிடும் கரு, இரண்டிற்கும் நடுவில் உள்ளது,இரண்டிலிருந்தும் போஷாக்கு பெறுகிறது. அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்;அனைத்து இதயங்களிலும் அன்பின் விதைகளை இடுங்கள். பாலைவன நிலங்களிலும் அன்பைப் பொழியுங்கள்; பசுமைச் செடிகள் முளைத்து,அழகான மலர்களையும்,வளமான பழங்களையும் தரட்டும்; இனிமையான அறுவடையான தேன் மனிதகுலம் அனைத்திற்கும் கிடைக்கட்டும்.