azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The basic cause for the occurrence of feelings like hatred, jealousy and anger is body consciousness. As long as body consciousness remains, the body will be subject to these types of feelings. For instance, all experiences derived through the senses and the mind occurs only during the waking state. When you go to sleep none of these experiences are present. The experiences in the dream state are real as long as the dream lasts. The experiences in the waking state are real in that state. The Reality or Truth, is the ‘I’ that remains in all the states. Over the ages, by identifying the ‘I’ with the body, its true nature has been grossly underrated. The truth is, this ‘I’ is subtle and incomparable. It is beyond change. This is the characteristic of Divinity. You must be aware of this and make efforts to recognise this inherent Divinity.(Divine Discourse, 5 Mar, 1995.)
வெறுப்பு,பொறாமை,கோபம் போன்ற உணர்ச்சிகள் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணம் இந்த உடலே நாம் என்ற உணர்வே. இந்த உணர்வு இருக்கும் வரை, உடல் இத்தகைய உணர்ச்சிகளுக்கு உட்படவே செய்யும். உதாரணமாக,புலன்கள் வழியாகக் கிடைக்கும் எல்லா அனுபவங்களும் விழிப்பு நிலையில் மட்டுமே நிகழ்கின்றன. நீங்கள் உறங்கும்போது,இந்த அனுபவங்கள் இருப்பதில்லை.கனவு நிலையின் அனுபவங்கள்,அந்தக் கனவு இருக்கும் வரையில்தான் நிஜமாகத் தோன்றுகின்றன. விழிப்பு நிலையின் அனுபவங்கள், அந்த நிலையில் மட்டுமே உண்மையாக இருக்கின்றன. சத்தியம் என்ன என்றால் , '' நான் '' என்பது மட்டுமே எல்லா நிலையிலும் இருக்கின்றது. பல காலமாக இந்த '' நான் '' என்பதை உடலாக ஏற்றுக் கொண்டு விட்டதால், இதன் உண்மை நிலை மிகவும் தாழ்வாக மதிப்பிடப் பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், இந்த '' நான் '' மிகவும் நுண்ணியமானது, இணையற்றது. மாற்றங்களுக்கு எல்லாம் அப்பாற் பட்டது. இதுவே தெய்வீகத்தின் பண்பாகும். நீங்கள் இதைக் கட்டாயம் புரிந்து கொண்டு, இந்த உள்ளார்ந்த தெய்வீகத்தை உணருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.