azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Step by step, you reach the end of the road. One act followed by another leads to a good habit. Listening over and over again, you get prodded into action. Resolve to act, to mix only in good company, to read only elevating books and to form the habit of remembering the Lord's name (Naamasmarana), then ignorance will vanish automatically. The Divine Bliss that will well up within you by the contemplation of the lord who is Bliss Personified, will drive out all grief and worry. Move forward towards the Light and the shadow falls behind; move away from it and you have to follow your own shadow. Go every moment one step nearer to the Lord and then maya (illusion) which is the shadow will fall back and will not delude you at all.(Divine Discourse, 11 Feb, 1964)
Follow the Master, face the devil, fight till the end and finish the game. - Baba
படிப்படியாக ,நீங்கள் உங்கள் பாதையின் முடிவை அடைகிறீர்கள்.ஒரு நல்ல செயல் மற்றொன்றைத் தொடர்ந்து,நல்ல பழக்கங்களுக்கு இட்டுச் செல்கிறது. திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம் நீங்கள் செயலாற்றத் தூண்டப் படுகிறீர்கள். செயலாற்ற முடிவெடுத்து, நல்லோருடன் மட்டுமே பழகி, முன்னேற்றம் தரும் புத்தகங்களையே படித்து, நாமஸ்மரணையை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டால்,பின்னர் அஞ்ஞானம் தானாகவே மறைந்து விடும். பேரானந்தத்தின் உருவான இறைவனை தியானிப்பதால் உங்களுள் பொங்கி எழும் தெய்வீக ஆனந்தம் துன்பத்தையும்,துயரத்தையும் போக்கி விடும். ஒளியை நோக்கி நடந்தால் ,நிழல் பின்னால் விழுகின்றது; அதிலிருந்து விலகி நடந்தால்,நீங்கள் நிழலைப் பின்பற்ற வேண்டி வருகிறது. ஒவ்வொரு கணமும் இறைவனது அருகாமையை நோக்கி ஒரு அடி எடுத்து வையுங்கள்; பின்னர் மாயை எனும் நிழல் பின் தங்கி, உங்களை மயக்கவே செய்யாது.
தலைவனாகிய இறைவனைப் பின்பற்றி,தீமையை எதிர்கொண்டு, இறுதிவரை போராடி,விளையாட்டை வெற்றிகரமாக முடியுங்கள்- பாபா