azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When a man falls into a well, of what use is it if he controls his voice and his emotions and whispers quietly, "I have fallen into this well.. I have fallen into this well... I am in great danger... Please save me?” and so on. No one will be able to hear or save him. He must shout full-throated, with all the anguish he is experiencing and with the extreme desire to be saved. Then he can hope to get succour. Similarly, when you are caught in the coils of this world, when you have fallen into this deep well of worldly misery, shout with all your might and all your heart, that you may be saved by God. There is no use muttering faintly and half-heartedly, "Save me... I am floundering in this samsaar (worldly life)." When the prayer comes shrieking through the heart, help is assured. Sing with intense yearning for God and enjoy the experience of adoring Him.(Divine Discourse, 14 Nov 1976.)
ஒரு மனிதன் ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டு, தனது குரலையும்,உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவான குரலில்,'' நான் கிணற்றில் விழுந்து விட்டேன், நான் கிணற்றில் விழுந்து விட்டேன், எனக்கு ஆபத்து,என்னைக் காப்பாற்றுங்கள்'' என்றெல்லாம் கூறுவதால் என்ன பயன்? யாராலும் அவன் குரலைக் கேட்டு,அவனைக் காப்பாற்ற முடியாது. தான் அனுபவிக்கும் முழு வேதனையுடன்,தான் காப்பாற்றப் பட வேண்டும் என்ற தாளாத ஆசையுடன்,உரத்த குரலில் அவன் கத்த வேண்டும். பின்னரே அவன், நிவாரணத்தை எதிர்பார்க்க முடியும். அதைப் போலவே, எப்போது, நீங்கள் இந்த உலகச் சூழலில் மாட்டிக் கொண்டு,இந்த உலகத்தின் துன்பம் எனும் கிணற்றில் விழுந்து விட்டீர்களோ,உங்கள் முழுத் திறனுடனும்,இதயபூர்வமாகவும்,இறைவனால் காப்பாற்றப் பட வேண்டும் எனக் கதறுங்கள். ஹீன ஸ்வரத்தில், அரை மனதோடு, '' என்னைக் காப்பாற்றுங்கள்.. நான் இந்த ஸம்ஸாரத்தில் மாட்டித் தவித்துக் கொண்டு இருக்கிறேன்.'' என்று முணு முணுப்பதால் பயன் இல்லை. எப்போது பிரார்த்தனை இதயத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு கிளம்புகிறதோ, உதவி கண்டிப்பாகக் கிடைக்கும்.இறைவனுக்காக ஆழ்ந்த ஏக்கத்துடன் பாடுங்கள், அவனைப் போற்றுவதன் அனுபவத்தால் ஆனந்தம் அடையுங்கள்.