azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

All worldly pleasures are transient and temporary. Very often they result in sorrow and disappointment. You often experience loss, depression and confusion and have no contentment. Know that lack of contentment is the real loss (Asantrupto nijo nashtah). There is no limit to desires. One feels hungry, another is thirsty. If the thirsty man is offered water, he is not satisfied, he wants a cool drink. When he is given a cool drink, next he wants ice cream, and so on. He is not satisfied with anything. Realize that there is no end to desires for material things in the world. To get rid of these desires, one must turn their mind towards God. The purpose of human birth is to realise the inherent Divinity. That is the way to achieve contentment and lasting bliss. God alone is the source of enduring bliss.(Divine Discourse, Apr 16, 1988.)
Desires are born of greed. When greed reduces and becomes less, contentment increases in equal measure. - Baba
உலகியலான இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை,தாற்காலிகமானவை. அவை பெரும்பாலும் துன்பத்திலும்,ஏமாற்றத்திலும் முடிகின்றன.நீங்கள் இழப்பு,மன அழுத்தம் மற்றும் குழப்பத்தையே பெரும்பாலும் அனுபவிக்கின்றீர்கள்; மனத்திருப்தி இருப்பதில்லை. மனத்திருப்தி இன்மையே உண்மையான இழப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஆசைகளுக்கு எல்லையே இல்லை.ஒருவருக்குப் பசிக்கிறது, மற்றொருவருக்கு தாகம் எடுக்கிறது.தாகம் எடுப்பவருக்குத் தண்ணீர் கொடுத்தால்,அவர் திருப்தி இன்றி குளிர்பானம் கேட்கிறார். அவருக்குக் குளிர்பானம் கொடுத்தால் அடுத்து ஐஸ்க்ரீம் கேட்கிறார்,இப்படியே நீண்டு கொண்டு போகிறது. அவருக்கு எதிலும் திருப்தி இருப்பதில்லை.உலகியலான பொருட்களின் மீது கொள்கின்ற ஆசைகளுக்கு அளவே இல்லை என்பதை உணருங்கள்.இந்த ஆசைகளை விட்டொழிக்க வேண்டும் என்றால், ஒருவர் மனதை இறைவன் பால் திருப்ப வேண்டும்.மனிதப் பிறவியின் நோக்கமே தன்னுள் உறையும் தெய்வீகத்தை உணர்வதே.அதுவே நிலையான திருப்தியும்,நிரந்தர ஆனந்தமும் அடையும் வழியாகும்.இறைவன் மட்டுமே நிரந்தரமான ஆனந்தத்தின் மூலமாவான்.
விருப்பங்கள் பேராசையிலிருந்து பிறக்கின்றன. எப்போது பேராசை தணிந்து, குறைகின்றதோ, மனத் திருப்தியும் அதே அளவு அதிகமாகிறது - பாபா