azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The very first lesson I gave when I declared My Identity at Uravakonda was: "Maanasa Bhajare Gurucharanam, Dusthara Bhava Saagara Tharanam." That is to say: First know that you are in this cycle of birth and death, the ocean of worldly life (bhava saagaram); then resolve on crossing it (tharanam); then fix on a Guru or the Name and Form of God which appeals to you; lastly, dwell on His Glory, do bhajan, but do it with all your mind. He, who is deluded by this relative reality is the worldly person (samsaari); he who is aware that it is only relatively real is the spiritual practitioner (saadhaka).
உரவகொண்டாவில் எனது தனித்துவத்தை அறிவித்த போது நான் அளித்த முதல் பாடம் '' மானஸ பஜரே குரு சரணம், துஸ்தர பவஸாகர தரணம்'' - அதாவது முதலில், பிறப்பு ,இறப்பு என்ற சுழற்சியைக் கொண்ட இந்த 'பவஸாகரம்' என்ற உலக வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; பின்னர் இதைக் கடந்தே தீருவேன் (தரணம்) என்ற ஸங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள்; பின்னர் குரு அல்லது உங்களுக்குப் பிடித்தமான இறை நாம,ரூபத்தில் உங்கள் மனதை நிலை கொள்ளச் செய்யுங்கள்; இறுதியாக அவனது மஹிமையை தியானித்து, உங்கள் முழு மனதையும் ஈடுபடுத்தி பஜனை செய்யுங்கள். ஓரளவே உண்மையான இந்த உலகமாயையில் மயங்குபவன் ஸம்ஸாரி. இது ஓரளவே உண்மை என உணர்ந்தவன் ஆன்மீக ஸாதகன்.