azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Proceed ever towards strength (balam). Do not take to untruth, wickedness, and crookedness – all of which denotes a fundamental fatal trait of cowardice and weakness (bala heenam). Weakness is born of accepting as true, a lower image of yourself than what the facts warrant. That is the main mistake. You believe you are the husk, but you really are the kernel. All spiritual practices must be directed to the removal of the husk and the revelation of the kernel. So long as you say, ”I am so and so”, there is bound to be fear. Once you say and feel “I am Divine” (Aham Brahmasmi), you get unconquerable strength.(Divine Discourse, Jan 14, 1964.)
Good resolutions (sankalpas) elicit the best out of you and help you use all your strength for your uplift. - Baba
எப்போதும் மனத்திண்மை ( பலம்) கொண்டவர்களாக இருப்பதை நோக்கிச் செல்லுங்கள். கோழைத்தனம் மற்றும் திண்மையின்மையின் ( பலஹீனம்) அபாயகரமான அடிப்படைத் தன்மைகளான பொய்,தீமை மற்றும் நேர்மையின்மை ஆகியவற்றில் ஈடுபடாதீர்கள்.உங்களது இயல்பை விடத் தாழ்ந்த ஒரு நிலையை உண்மை என ஏற்றுக் கொள்வதால் பிறப்பதே பலஹீனம். இதுவே முக்கியமான தவறாகும். நீங்கள்,உங்களை வெளித் தோலான உமி என நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்;ஆனால் உண்மையில் நீங்களே உள்ளிருக்கும் தானியம். அனைத்து ஆன்மீக சாதனைகளும் உமியை நீக்கி, உள்ளிருக்கும் தானியத்தை வெளிக்காட்டுவதைக் குறித்தே இருக்க வேண்டும்.'' நான் இன்னார்'' என்று சொல்லுகின்ற வரை, அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கும். நீங்கள் '' நானே பரப்ரம்மம் ( அஹம் ப்ரம்மாஸ்மி )'' என உணர்ந்து விட்டால், தோற்கடிக்கவே இயலாத சக்தியைப் பெறுவீர்கள்.
நல்ல தீர்மானங்கள் ( ஸங்கல்பங்கள்) உங்களின் சிறந்தவற்றை வெளிக் கொணர்ந்து,உங்களின் அனைத்து சக்தியையும் உங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த உங்களுக்கு உதவுகின்றன - பாபா