azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The root of education fulfills itself in the fruit of virtue. Earning a fat salary is not the chief thing one should expect from education. The goal should be the cultivation of virtues. Education is the root of the tree of life. The affection which the individual develops towards kith and kin, the objects of the world, the ideals and the goals, the fancies and fashions - these form the branches and twigs. The blossoms which the tree produces are the intelligence and its manifestations. These flower blossoms yield the fruit of joy (anandam). The sweetness this fruit confers is character. The essence of character is virtue. It is in virtue that the tree of life justifies itself.(Sathya Sai Speaks, Vol 6, Ch 25)
கல்வியின் ஆணிவேர்,நல்லொழுக்கம் எனும் பழத்தை நல்கும்போது தனது முழுமையைப் பெறுகிறது. கொழுத்த சம்பளத்தைப் பெறுவதைத் தான் கல்வியின் எதிர்பார்ப்புக்களில் தலையானதாக ஒருவர் கொள்ளக் கூடாது. நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்வது தான் குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்வியே வாழ்க்கை எனும் மரத்தின் ஆணி வேர். உற்றார் உறவினர், உலகியலான பொருட்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள், கற்பனைகள் மற்றும் பாணிகள்- இவைகளின் மீது ஒரு தனி மனிதன், வளர்த்துக் கொள்ளும் பற்றுதல்களே கிளைகளாகின்றன. புத்தி மற்றும் அதன் வெளிப்பாடுகளே இந்த மரம் உருவாக்கும் மலர்கள். இவை மலர்ந்து ஆனந்தம் எனும் பழத்தை அளிக்கின்றன. இந்தப் பழம் அளிக்கும் இனிமையே பண்புகள். பண்புகளின் சாரமே நல்லொழுக்கம். இந்த நல்லொழுக்கத்தில் தான் வாழ்க்கை எனும் மரம் தன்னையே சீர்படுத்திக் கொள்கிறது.