azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Many often believe and state in the spirit of surrender: “I offer to You my body, my mind, my possessions, my all." This is incorrect and is a sign of ignorance. It concedes that you and God are distinct entities. God is not separate from you, for God is in all, everywhere, at all times. (Ishwarassarva-bhoothaanaam). How then can you or God be apart? To see God in everything, everywhere, at all times, is true surrender (Sharanaagathi). Repetition of mantras (holy formulae) and platform speeches on holy texts alone is not true devotion. The real devotee is one whose deeds are in accordance with the words of advice they utter. Devotion cannot tolerate in a devotee, the slightest trace of envy or jealousy. Make your daily life holy and pure. Render your life worth-while through service to man and service to society. That is the most important aspect of surrendering the self.(Divine Discourse, Oct 8, 1981.)
Surrendering the fruits of your action to the Lord is real sacrifice. - Baba
பெரும்பாலும் பலர் ஸரணாகதி உணர்வில் , '' நான் என் உடல்,உள்ளம், உடமைகள், அனைத்தையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன் '' என நம்பிக்கையோடு கூறுகிறார்கள். இது சரியல்ல, மேலும் இது அஞ்ஞானத்தின் அறிகுறி. இது ,நீங்களும்,இறைவனும் தனித் தனியானவர்கள் என ஒப்புக் கொள்வதைப் போலாகும்.இறைவன் உங்களிலிருந்து தனிப்பட்டவன் அல்ல, ஏனெனில்,இறைவன் அனைத்திலும், எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கின்றான் ( ஈஸ்வர ஸர்வ பூதானாம்). இறைவனை, ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு இடத்திலும்,எல்லாக் காலங்களிலும் காண்பதே உண்மையான ஸரணாகதியாகும். மந்திரங்களை ஜபிப்பதும்,புனித நூல்களைப் பற்றி மேடைகளில் பேசுவதும் மட்டும் உண்மையான பக்தியாகாது. எவரது செயல்கள் அவர்களது வார்த்தைகள் அளிக்கும் அறிவரைக்கு ஏற்ப இருக்கிறதோ, அவரே உண்மையான பக்தர். பக்தி என்பது ஒரு பக்தனிடம், பொறாமையின் சுவடு இருப்பதைக் கூட பொறுத்துக் கொள்ளாது. உங்களது அன்றாட வாழ்க்கையை புனிதமானதாகவும்,தூய்மையானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். மனிதருக்கும் ,சமுதாயத்திற்கும் சேவை ஆற்றுவதன் மூலம், உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.இதுவே ஸரணாகதியின் மிகவும் முக்கியமான அம்சமாகும்.
உங்களது செயல்களின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே உண்மையான யக்ஞமாகும் - பாபா