azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Obstacles that come in the way are often treated with a certain amount of resentment by the pilgrims on the spiritual path. But these tests are to be treated as a means of ensuring safety. You drive a nail into the wall to place a picture thereon; but before hanging the photo, you try to see whether the nail has been well driven by shaking it; when you are certain it does not move a bit even when all your strength is used, you have the confidence to hang the picture on it. You must welcome tests because it gives you confidence and it ensures promotion.( Divine Discourse, Sep 8, 1966.)
Test all your actions, words and thoughts on this touchstone:
“Will this be approved by God?” - Baba
ஆன்மீகப் பாதையில் வருகின்ற தடைகளை, அதில் பயணம் செய்யும் சாதகர்கள் பெரும்பாலும் ஒருவித வெறுப்புடனேயே அணுகுகிறார்கள். ஆனால், இந்த சோதனைகளை பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் சாதனங்களாகக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு படத்தை சுவரில் மாட்டுவதற்காக, ஒரு ஆணியை அடிக்கிறீர்கள்; ஆனால், ஆணியில் படத்தை மாட்டுவதற்கு முன் அது ஆழமாகப் பதிந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக அதை ஆட்டிப் பார்க்கிறீர்கள்; எப்போது உங்கள் பலம் அனைத்தையும் பிரயோகித்து அதை ஆட்ட முயன்றாலும் அது ஒரு இம்மி கூட அசையாமல் இருக்கிறது என்பது உங்களுக்கு உறுதியாகிறதோ, அப்போது தான் அதில் அந்த படத்தை மாட்டலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டாகிறது. சோதனைகளை நீங்கள் வரவேற்க வேண்டும்; ஏனெனில் அவையே உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி உயர்வினை உறுதி செய்கின்றன.
உங்கள் அனைத்து எண்ணம்,சொல் மற்றும் செயல்களை, '' இவற்றை இறைவன் அங்கீகரிப்பானா? '' என்ற உரைகல்லில் சோதித்துப் பாருங்கள்- பாபா