azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

If only the agony and toil now being experienced by you to accumulate the symbols of wealth and power for keeping yourself and your family in comfort, are directed towards God, you can be infinitely happier. The veil of maya (illusion), however, hides from you the face of God which is shining from every being and thing around you. Maya creates the universe and attracts the mind with the vast paraphernalia of the objective world. It is a narthaki, an enchantress who entices the intelligence and traps the senses. This na-rtha-ki can be subdued by ki-rtha-na (note the re-ordering of the syllables). Kirthana is the concentrated contemplation of the glory of God.(Divine Discourse, Sep 8, 1966.)
Be always attentive to the signs of His Glory, His Mercy and His Omnipresence. - Baba
உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சௌகரியமாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான செல்வம் மற்றும் பதவிகளைக் குவித்துக் கொள்வதற்காக, நீங்கள் படுகின்ற வேதனையையும், உழைப்பையும், இறைவனைக் குறித்து மட்டும் பட்டீர்களானால்,நீங்கள் பேரானந்தம் பெறுவீர்கள். உங்களைச் சுற்றி உள்ள ஒவ்வொன்றிலும்,ஒவ்வொரு ஜீவராசியிலும்,ஒளிர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இறைவனது முகத்தை,மாயையின் திரை உங்களிடமிருந்து மறைத்து விடுகிறது. மாயை இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி, மனதை,இந்த உலகின் பரந்து விரிந்துள்ள பொருட்களின் பால் ஈர்த்து விடுகிறது. ஒரு நாட்டியக்காரியைப் ('' நர்த்தகி '') போல, அது புத்தியை மயக்கி,புலன்களை பொறிகளில் சிக்க வைக்கிறது. ''ந-ர்த்-தகீ ''யை, '' கீ-ர்த்-தனா '' வால் பணிய வைக்க முடியும்.( வார்த்தை ஜாலத்தை கவனியுங்கள் ) - கீர்த்தனா என்பது மனக்குவிப்புடன் இறைவனது மகிமைகளை தியானிப்பதாகும்.
இறைவனது மகிமை,கருணை மற்றும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையின் அறிகுறிகளைக் கூர்ந்து கவனியுங்கள் - பாபா