azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Meditate upon the flute of Krishna and the melody it aroused in the veins of mankind, animals, birds, plants and even hills, rivers and rocks on sand dunes. Dwell also on the supreme love of the Gopis, their surrender of everything, gross and subtle, of ego and egoistic attachment at the feet of the Supreme Being. They spoke no word except prayer, they moved no step, except towards God, they saw and heard only Krishna in every being, they spoke every word of Him, to Him, no matter who was present with them. Lord Krishna filled their hearts and transmuted them into the most self-effacing group of devotees the world has ever seen. And know that the Lord’s assurance, "Yogakshemam Vahaamyaham" (I shall take care of the well being of My devotees) is no empty declaration; it is the vow of the Lord, and He is the very embodiment of Truth.(Divine Discourse, Sep 7, 1966.)
You can transform even a wicked person through your love. - Baba
பகவான் ஸ்ரீகிருஷ்ணரது புல்லாங்குழல் மற்றும் அது ,மனித குலம்,மிருகங்கள், பறவைகள், செடிகொடிகள் ஏன் குன்றுகள்,நதிகள், மணற்குன்றுகள் மீதுள்ள பாறைகள், என்ற அனைத்தின் ரத்த நாளங்களிலும் தட்டி எழுப்பிய இன்னிசை ஆகியவற்றை தியானியுங்கள். கோபிகைகளின் தலை சிறந்த ப்ரேமை, ஸ்தூலமான,சூக்ஷ்மமான அனைத்தையும், அஹங்காரம் மற்றும் அதனால் ஏற்படும் பற்றுதல்கள் யாவையும் அந்த பரப்பரம்மத்தின் பாதகமலங்களில் அவர்கள் சரணாகதி அடையச் செய்தது ஆகியவற்றில் உங்கள் மனதை நிலை கொள்ள செய்யுங்கள். அவர்கள் வழிபாட்டைத் தவிர எந்த மொழியையும் பேசவில்லை; இறைவனை நோக்கி அல்லாத எந்த அடியையும் எடுத்து வைக்க வில்லை; எல்லா ஜீவராசிகளிலும் ஸ்ரீகிருஷ்ணரை மட்டுமே கண்டனர் , கேட்டனர்; அவர்களைச் சுற்றி எவர் இருந்த போதும், ஒவ்வொரு வார்த்தையையும் அவனைப் பற்றியே, அவனிடம் மட்டுமே பேசினார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களது இதயங்களை ஆனந்தத்தால் நிரப்பி,இந்த உலகம் என்றுமே கண்டிராத தன்னையே மறக்கும் பக்தைகளாக மாற்றினார். '' யோகக்ஷேமம் வஹாம்யஹம் ''( நான் எனது பக்தர்களின் நலனை கவனித்துக் கொள்வேன் ) என்ற இறைவனின் உத்திரவாதம் வெற்று வார்த்தைகள் அல்ல. இது இறைவன் எடுத்துள்ள சபதம் ; அவன் சத்தியத்தின் திரு உருவம்.
கொடிய மனிதரைக்கூட உங்களது அன்பால் மனமாற்றம் செய்ய முடியும் - பாபா