azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Be thankful to the Lord, for He gave you Time, as well as action to fill it with. He gave you food, as well as hunger to relish it. But that does not entitle you to engage yourself in action indiscriminately. When you build a house, you install a door in it, don’t you? What is the purpose of the door? It has dual objectives - to welcome all you would like to offer hospitality to, and to keep out all and sundry, so that they cannot walk in whenever they like. So too, install a door in your mind. Select the impulses, the motives, and the incentives that appear in your mind and welcome them in. Keep out the demeaning, the debasing and the deleterious. Then, gradually you will be able to admit and experience the highest wisdom of the scriptures, the wisdom culled out of the crucible of experience (anubhava jnananam).(Divine Discourse, Jan 1, 1964.)
Love is the key to open the doors locked by egoism and greed. - Baba
இறைவனுக்கு நன்றி கூறுங்கள்,ஏனெனில், காலத்தை அளித்து,அதை நிரப்புவதற்கான செயல்களையும் அளித்தவன் அவனே.அவனே உணவையும் அளித்து, அதன் சுவையை அனுபவிப்பதற்கான பசியையும் அளித்துள்ளான். ஆனால், அதற்காக, நீங்கள் கண்மூடித்தனமாக செயல்களில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது.ஒரு வீட்டைக் கட்டும்போது,அதற்கு ஒரு வாசற்கதவு வைக்கிறீர்கள் அல்லவா? அந்த கதவின் பயன் என்ன? அதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன; நீங்கள் எவரை எல்லாம் விருந்தோம்ப நினைக்கிறீர்களோ, அவர்களை அனுமதிப்பது;அதே சமயம் கண்டவர்களை எல்லாம் அவர்களது இஷ்டப்படி, நினைத்த போதெல்லாம் உள்ளே வராமல் தடுப்பது. அதைப் போலவே உங்கள் மனதிற்கும் ஒரு வாசற்கதவை அமையுங்கள். உங்கள் மனதில் தோன்றும் உணர்ச்சிகள்,உந்துதல்கள் மற்றும் ஊக்குவிப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மட்டும் வரவேற்பு அளியுங்கள். இழிவான,தரக்குறைவான,தீங்கு விளைவிக்கக் கூடியவற்றை அனுமதிக்காதீர்கள். பின்னர், படிப்படியாக அனுபவ ஞானத்திலிருந்து புடம் போட்டு எடுக்கப் பட்ட, வேதங்களின் தலைசிறந்த ஞானத்தை உங்களால் , உள்ளே அனுமதித்து, அனுபவிக்க முடியும்.
அன்பே, அஹங்காரம் மற்றும் போராசைகளால் பூட்டப்பட்ட கதவுகளைத் திறக்கும் சாவியாகும் - பாபா