azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

When you feed the cow with fermented gruel so that it may yield more milk, the milk emits an unpleasant smell. When you engross yourself too much with the trifles of the world, your character and conduct will also become unpleasant. It would indeed be tragic to witness the downfall of a ‘child of immortality’, struggling in despair and distress. If only you were to ask yourself: “What are my qualifications? What is my position? What are the opportunities I am bestowed with?” Then you will soon realize your own downfall and make efforts to recover. Will a tiger, however hungry eat popcorn or peanuts? Stay focussed on the goal worthy of your lineage. Never slacken the effort, whatever be the obstacle, however long the journey. Keep your efforts on, in line with the dignity of your noble goals.(Divine Discourse,Sep 7, 1966.)
நீங்கள்,அதிக பால் கறக்க வேண்டும் என்பதற்காக,பசு மாட்டிற்கு அழுகிய கஞ்சியைக் கொடுத்தீர்களானால்,பாலும் ஒரு துர்நாற்றத்தை அளிக்கும். இந்த உலகின் அற்ப விஷயங்களில் நீங்கள்,உங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தீர்களானால், உங்களது குணநலன்களும், நடத்தையும் கூட அருவருக்கத் தக்கதாக ஆகி விடும். '' அமரபுத்திரரான '' நீங்கள் துக்கத்திலும், துயரத்திலும் தத்தளித்து வீழ்ந்து கிடப்பதைக் காண்பது துர்பாக்யமே. நீங்கள் மட்டும், உங்களையே, '' எனது தகுதிகள் என்ன? எனது தராதரம் என்ன? எனக்கு அளிக்கப் பட்டுள்ள வாய்ப்புக்கள் என்ன ? '' என்று வினவினீர்கள் என்றால், உங்களது வீழ்ச்சியை உணர்ந்து,அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். ஒரு புலி எவ்வளவு பசித்தாலும் சோளப் பொரியையோ, நிலக்கடலையையோ தின்னுமா? உங்களது பாரம்பரியத்திற்குத் தகுதியான குறிக்கோளை அடைவதில் முனைப்புடன் இருங்கள்.பயணம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும், எந்தத் தடைகள் வந்தாலும்,உங்களது முயற்சிகளைத் தளர விடாதீர்கள். உங்களது சீரிய குறிக்கோளின் கண்ணியத்திற்கு ஏற்றவாறு,உங்களது முயற்சிகளைத் தொடருங்கள்.