azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You have to become Divine, the Divinity from which you have arrived. So lessen your attachment to the world, not by cutting yourself off from the world, but by being in it, as an instrument in His hands. To realize the omnipotent Divine within you, recognize your kinship with the Universe. Keep your body fit, light and bright. Don’t add to it the burden of attachment to this and that. Subdue the heads of all the tendencies within you that lead you to egoism. Have single-minded attention to the dictates of God and practice right-conduct. Edison, the great scientist concentrated so much on the solution of the problems that worried him that at times, he left food untouched for days on end, when they were pushed through the doors of his lab. You must have that same concentration and earnestness, when engaged in spiritual practices.(Divine Discourse, Oct 4 1965.)
Learn today to give up attachments to the things of the world and seek the love of God. - Baba
எந்த தெய்வீகத்திலிருந்து நீங்கள் வந்தீர்களோ,அந்த தெய்வீகமாக நீங்கள் ஆக வேண்டும். எனவே,உலகிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளாது, இவ்வுலகிலேயே இறைவனது கருவியாக இருப்பதன் மூலம்,உலகத்தின் மீது வைத்துள்ள பற்றுதலை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுள் உள்ள ஸர்வ வல்லமை கொண்ட இறைவனை உணர்வதற்கு, இந்த பிரபஞ்சத்துடன் உங்களுக்கு உள்ள உறவைப் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலை திறன் கொண்டதாகவும், லேசானதாகவும், பிரகாசமானதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது, பல விஷயங்களின் பற்றுதல் என்ற சுமையை ஏற்றாதீர்கள். அஹங்காரத்திற்கு இட்டுச் செல்லும், பல உந்துதல்களை தலை எடுக்காமல் அடக்கி வையுங்கள். இறைவனது ஆணைகளின் மீதே ஒருமித்த கவனத்தை செலுத்தி, தர்மத்தைக் கடைப் பிடியுங்கள். விஞ்ஞானி எடிஸன்,அவரது சோதனைக் கூடத்தின் கதவுகள் மூலம் அளிக்கப் பட்ட உணவை பல நாட்கள் தொடக்கூடச் செய்யாமல்,தான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு விடை காண்பதில், மூழ்கி இருந்தாராம். ஆன்மீக சாதனைகளில் ஈடுபடும்போது,உங்களுக்கும் அப்படிப் பட்ட மனக்குவிப்பும்,உள்ளார்வமும் இருக்க வேண்டும்.
இன்றே,உலகியலான விஷயங்களின் மீது உள்ள பற்றை விடுத்து இறை அன்பை நாடுங்கள் - பாபா