azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

God incarnates to foster spiritual aspirants (sadhus), it is said. The term sadhus does not refer to just those renunciants who dwell in forests. Sadhu is the virtuous person who forms the inner reality in each one of you. Every being is a sadhu, for all mankind is an embodiment of love, peace and bliss. By allowing the crust of ego to grow thick and fast, your real nature is tarnished. By the action of sathsang (the company of the noble and pious), and systematic attention to self-control and self-improvement, you can overcome the delusion that makes you identify with the body, its needs and cravings.(Divine Discourse, Sep 7, 1966.)
ஆன்மீக சாதகர்களான சாதுக்களைப் பேணுவதற்காக இறைவன் அவதாரம் எடுக்கிறான் எனக் கூறப் படுகிறது. '' சாதுக்கள்'' என்றால், காடுகளில் வசிக்கும் துறவிகளை மட்டும் குறிப்பதல்ல. உங்கள் ஒவ்வொருவர் உள்ளும் உறையும் அந்தராத்மாவை உருவாக்கும் சீலரே சாது எனப் படுபவர்.ஒவ்வொருவரும் சாதுவே, ஏனெனில் மனித குலம் அனைத்தும் ப்ரேமை,சாந்தி மற்றும் ஆனந்தத்தின் ஸ்வரூபமே. அஹங்காரம் எனும் மேல் உறையை, அடர்த்தியாகவும் , வேகமாகவும் வளர விட்டு விடுவதே, உங்களது உண்மை நிலையை களங்கப் படுத்தி விடுகிறது. ஸத்ஸங்கத்தின் மூலமும், சுயக்கட்டுப்பாடு மற்றும் சுயமுன்னேற்றத்தில் முறையான கவனம் செலுத்துவதன் மூலமும், இந்த உடல் மற்றும் அதன் ஆசாபாசங்களே நீங்கள் எனக் கருதும், மாயையிலிருந்து விடுபட முடியும்.