azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In the firmament of the heart, the intellect (sun) and the mind (moon) revolve on their regular courses. If envy, greed, hate or malice dim the glory, they are to be dismissed as passing clouds that cannot affect the sources of light. The more you reason out things, the clearer will become the reality. Reasoning power will never hinder the discovery of the Truth; only you have to go as far as reason can take you; then you can see the vast vistas beyond. Man has been endowed with enormous, immeasurable talents, skills and power; but is using all that to journey towards the moon, instead of journeying towards the wonderland of one’s own inner realms, where one can come face to face with God who is the inner Reality of this entire phenomenal world.(Divine Discourse, Aug 3, 1966.)
All that you are, you owe to society. Show your gratitude to it by rendering service. - Baba
இதயம் எனும் ஆகாயத்தில்,புத்தி என்ற சூரியனும்,மனம் என்ற சந்திரனும், தத்தம் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கின்றன.பொறாமை,பேராசை,த்வேஷம் மற்றும் வன்மம் போன்றவை அவற்றின் ஒளியை மங்க வைக்குமானால், அவற்றை ,அந்த ஒளி மூலத்தை பாதிக்க இயலாத கடந்து செல்லும் மேகங்களாகக் கருதி, ஒதுக்கி விட வேண்டும். நீங்கள் விஷயங்களை எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிகிறீர்களோ,அந்த அளவு உண்மை நிலை தெளிவாகும். சத்தியத்தைக் கண்டறிவதற்கு பகுத்தறிவு ஒருபோதும் தடையாக இருக்காது; அது இட்டும் செல்லும் அளவிற்கு நீங்கள் தான் செல்ல வேண்டும்; பின்னர், அவற்றிற்கும் அப்பாற்பட்டு இருக்கும் பரந்து விரிந்த அழகிய தோற்றங்களை நீங்கள் காண முடியும். மனிதனுக்கு மகத்தான,அளவற்ற திறன்கள்,ஆற்றல்கள் மற்றும் சக்தி கொடுக்கப் பட்டுள்ளது: ஆனால், இவற்றை எல்லாம், இந்த பிரபஞ்சம் அனைத்தின் உட்பொருளான இறைவனை நேருக்கு நேர் காணக் கூடிய , ஆச்சரியகரமான பிரதேசமான தனது அந்தராத்மாவை நோக்கிப் பயணிப்பதற்கு பதிலாக, சந்திரனை நோக்கிப் பயணம் செய்வதற்கு மனிதன் பயன் படுத்துகிறான்.
நீங்கள் பெற்றுள்ள அனைத்திற்கும், இந்த சமுதாயத்திற்குக் கடன் பட்டு இருக்கிறீர்கள். உங்களது நன்றியுணர்வை சேவை ஆற்றுவதன் மூலம் வெளிப்படுத்துங்கள்- பாபா