azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You see and hear certain things during the day. But when you go to bed and dream during sleep, you are not aware of all this; you see and experience a new set of events, which seem as real, as impressive, and as significant as those you witnessed when awake. And when in deep sleep, nothing ‘is’, except probably the inner consciousness that you are. When you dream, the dream is real; when awake, the waking experience is as real as the dream was. The fact is, it is all a dream, a creation of the mind when the Atma (the true self) is reflected on it. Remove that mind, then there will be nothing on which the Atma reflects. The Atma shall then shine in its own splendour. Jnana (Wisdom) is passing from the dream stage to the waking stage, and realising the dream to be unreal. Seek the springs of bliss within you and happiness will be your lot, here and for ever. Believe that the bliss within you is derived from God who is your Reality.(Divine Discourse,Aug 3, 1966.)
If you are patient and calm, I shall grant you joy without fail. Do not yield to despair. Even the infant lotus buds will bloom, in their own good time. - Baba
நீங்கள் நாட்பொழுதில் சிலவற்றைப் பார்க்கிறீர்கள்,கேட்கிறீர்கள். ஆனால், நீங்கள் படுக்கைக்குச் சென்று உறங்கும் போது,உங்களுக்கு அவையெல்லாம் தெரிவதில்லை: இப்போது, விழித்திருக்கும் காலத்தில் நீங்கள் பார்த்ததைப் போன்ற , நிஜமாகவும், தெளிவாகவும், முக்கியமானதாகவும் தோன்றும் சில சம்பவங்களைக் கண்டு அனுபவிக்கிறீர்கள். ஆழ்ந்த உறக்கத்தில்,ஒருவேளை அந்தராத்மாவான உங்களைத் தவிர, வேறு எதுவும் இருப்பதில்லை. கனவின் போது,அது நிஜமாகத் தோன்றுகிறது; விழித்திருக்கும் போது ,அந்த அனுபவம் ,கனவில் உள்ளதைப் போலவே நிஜமாகத் தோன்றுகிறது. உண்மையில்,இவை அனைத்துமே,ஆத்மா மனதில் பிரதிபலிக்கும்போது, மனதால் உருவாக்கப் பட்ட கனவுகளே. மனதை எடுத்து விடுங்கள்; பின்னர் ஆத்மா பிரதிபலிப்பதற்கு என்று எதுவுமே இருக்காது. பின்னர் ஆத்மா தனக்கே உரித்தான ஒளியுடன் மிளிரும். ஞானம் என்பது கனவு நிலையிலிருந்து, விழிப்பு நிலைக்குச் சென்று, கனவனைத்தும் உண்மையல்ல என உணருவதுதான். உங்களுள் உள்ள ஆனந்த ஊற்றை நாடுங்கள். பின்னர் சந்தோஷம் இன்றும் என்றும் உங்களுக்கே உரித்தானதாகி விடும். உங்களது உண்மை நிலையான தெய்வீகத்திலிருந்து பெறப்பட்டதே,உங்களுள் உள்ள ஆனந்தம் என்பதை நம்புங்கள்.
நீங்கள் பொறுமையாகவும்,அமைதியாகவும் இருந்தால், நான் தவறாமல்,உங்களுக்கு ஆனந்தத்தை அளிப்பேன். நம்பிக்கையை இழக்காதீர்கள்.இளந் தாமரை மொட்டுக்கள் கூட தமக்கே உரித்த நேரத்தில் தான் மலருகின்றன - பாபா