azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

There are some people, who always condemn themselves and their lives, and aspire for the grace of God to save them. They think that jeeva (individual) and Deva (Almighty) are two separate entities and can never merge or unite. This is untrue. Sin is not the real nature of human beings. They are repositories of peace, joy, truth and justice and are pure, good, loving and wise. Endeavour to express through your actions, the purity that you are. This pleases the Lord and He will shower His grace. Pray for even those who express greed or hate, sympathize with their ignorance and pray that their steps may be directed towards justice and love. Expand your love to as wide a circle as possible. Prayer has great efficacy. Cultivate the universal vision and pray for the peace and happiness of all mankind, of all animate and inanimate things.(Divine Discourse, Oct 2, 1965.)
Practice the vocabulary of love – unlearn the language of hate and contempt. - Baba
சிலர் எப்போதும் தங்களையும்,தங்கள் வாழ்க்கையையும் பயனற்றது எனக் கண்டனம் செய்து கொண்டு, தங்களைக் காப்பாற்ற இறைவனது அருளை நாடுகிறார்கள்.அவர்கள் ஜீவனும், தேவனும் வெவ்வேறானவர்கள் , அவர்கள் இருவரும் இணையவோ,சேரவோ ஒருபோதும் முடியாது என நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. பாவம் செய்வது என்பது மனிதர்களது உண்மையான இயல்பு அல்ல. அவர்கள் சாந்தி,ஆனந்தம், சத்தியம் மற்றும் நீதியின் களஞ்சியங்கள்; அவர்கள் தூய்மையானவர்கள், நல்லவர்கள், அன்பானவர்கள் மேலும் விவேகமுடையவர்கள். உங்களது செயல்களின் மூலம், தூய்மையே நீங்கள் என்பதை வெளிப்படுத்த கடும் முயற்சி செய்யுங்கள்.இது இறைவனை மகிழ்விக்கும்; அவன் தனது அருளைக் கட்டாயம் பொழிவான்.பேராசை அல்லது வெறுப்பை காட்டுபவர்களுக்காகவும் கூட பிரார்த்தித்து, அவர்களது அறியாமைக்காக இரங்கி, அவர்களது காலடிகள், நீதி மற்றும் அன்பின் பாதையை நோக்கிச் செல்லுமாறு வேண்டுங்கள். உங்களது அன்பின் வட்டத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விசாலமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு ஆக்குங்கள். பிரார்த்தனை மிகச் சிறந்த பலனளிக்க வல்லது. பிரபஞ்சமயமான பார்வையை வளர்த்துக் கொண்டு, அனைத்து மனித குலம் மேலும், அனைத்து அசையும் மற்றும் அசையாப் பொருட்களின் சாந்தி ,சந்தோஷங்களுக்காக பிரார்த்தியுங்கள்.
அன்பின் சொற்திறனைக் கையாண்டு , வெறுப்பு மற்றும் இகழ்ச்சியின் மொழியை கைவிடுங்கள் - பாபா