azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The body is the temple of God, He is the resident of the heart, and intelligence (Buddhi) is the lamp that is lit in its altar. Protect the lamp and its glow from the wind that blows through the windows of the senses and threatens to put them out. Close the windows, do not keep them open for dire attraction from objects. Keep your intellect sharp, so that it may cut the mind into a diamond and convert it into a blaze of light, instead of being a dull pebble. Discrimination is an important instrument of spiritual progress. Attachment, affection, and interests - these create prejudice, partiality, and illusion. They hide the truth and dull the intelligence. The reasoning faculty must be employed to distinguish between the limited and the unlimited, the temporary and the Eternal( Divine Discourse, Oct 2, 1965.)
Only by the light of the Divine lamp inside can you blossom as a worthwhile person. - Baba
உடலே இறைவன் உறையும் ஆலயம்; இறைவனே இதயவாசி< , புத்தியே அதன் பீடத்தில் ஏற்றி வைக்கப் பட்டுள்ள தீபம். புலன்கள் என்னும் ஜன்னல்களின் மூலம் வரும் காற்று அதை அணைத்து விடாமல் இருக்க, அந்த தீபத்தையும் அதன் ஜோதியையும் காப்பாற்றுங்கள். உலகப் பொருட்களின் கொடிய கவர்ச்சிகளுக்குத் வழி அளிக்காதிருக்க, அந்த ஜன்னல்களை மூடி வையுங்கள். மனதை, மங்கலான கூழாங்கல்லாக இன்றி, வைரமாக அறுத்து, ஒளிர் விடும் ஜ்வாலையாக மாற்றுவதற்கு ஏற்றவாறு புத்தியைக் கூர்மைப் படுத்துங்கள். பகுத்தறிவு, ஆன்மீக முன்னேற்றத்திற்கான, முக்கியமான கருவியாகும். பற்றுதல்,பாசம்,ஆர்வம் -இவை காழ்ப்புணர்வு, பாரபட்சம் மற்றும் மாயையை உருவாக்குகின்றன. அவை சத்தியத்தை மறைத்து,புத்தியை மழுங்கச் செய்கின்றன . குறுகியவை மற்றும் எல்லையற்றவை ,தாற்காலிகமானவை மற்றும் நிரந்தமானவை எனப் பிரித்து அறிவதற்கு ,பகுத்தறியும் திறனைப் பயன்படுத்த வேண்டும்.
உங்களுள் உள்ள தெய்வீக ஜோதியின் மூலமே, நீங்கள் பயனுள்ள மனிதராக மலர முடியும் - பாபா