azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Statesmen and elected representatives declare that they are trying their best to develop the resources, natural and human, and to provide on the basis of those resources, food, clothing, shelter, education, employment, security and health to the people. But the development of the moral and spiritual resources are neglected and the provision of peace and spiritual happiness is ignored. Happiness and peace do not necessarily follow when people are fed and clothed well, comfortably housed and highly educated, well employed or when there is no injury to health or security. There are quite a large number of people who have all these in plenty but are yet worried, in pain or discontented. Peace and happiness depend on what lies within and not on outer skill or riches. Every being is fundamentally Divine and so, the more one manifests the divine attributes of Love, Justice, Truth and Peace, the more joy one shall be able to give and receive.(Divine Discourse, Aug 3, 1966.)
To enjoy enduring happiness, fill your mind with pure thoughts and entertain
fine feelings in your heart. - Baba
அரசியல் நிபுணர்களும்,தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கட் பிரதிநிதிகளும்,இயற்கை மற்றும் மனித வளங்களைப் பெருக்கி, அதன் மூலம் மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம், வேலைவாய்ப்பு,பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்க பெரிதும் முயலுவதாக பறை சாற்றுகிறார்கள். ஆனால்,ஒழுக்க மற்றும் ஆன்மீக வளங்களின் வளர்ச்சி புறக்கணிக்கப் பட்டு,சாந்தியும்,ஆன்மீக சந்தோஷங்களும் அலட்சியப்படுத்தப் படுகின்றன.மக்களுக்கு நன்றாக உணவு மற்றும் உடை அளிப்பதாலும், சௌகரியமான உறைவிடம் தருவதாலும், மெத்தப் படித்திருப்பதாலும், சிறந்த வேலை செய்வதாலும்,உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்குப் பாதகம் ஏற்படாமல் இருப்பதாலும் மட்டுமே சாந்தி,சந்தோஷங்கள் கிடைத்து விடும் எனக் கூற முடியாது. இவை அனைத்தையும் பேரளவில் பெற்றிருந்தும், பலர், கவலையுடனும்,துன்பத்தில் ஆழ்ந்தும், அதிருப்தியுடனும் இருக்கிறார்கள். சாந்தி , சந்தோஷங்கள் உள்ளார்ந்தவற்றைச் சார்ந்துள்ளனவே அன்றி வெளிப்படையான திறன்களிலோ, செல்வங்களிலோ இல்லை. ஒவ்வொரு ஜீவனும் அடிப்படையில் தெய்வீகமானதே; எந்த அளவிற்கு ஒருவர் தெய்வீக குணங்களாகிய சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமையை வெளிப்படுத்துகிறாரோ,அந்த அளவிற்கு அவரால் ஆனந்தத்தைத் தரவும் ,பெறவும் முடியும்.
நிரந்தரமான ஆனந்தத்தை அனுபவிக்க,உங்கள் மனதை தூய எண்ணங்களால் நிரப்பி,இதயத்தில் சீரிய உணர்வுகளுக்கு இடமளியுங்கள் - பாபா